ஓம் நமசிவாய - யாரெல்லாம் கூறலாம்?
நல்ல மனமும் நல்ல குணமும் உள்ள யாரும் நம சிவாய மந்திரத்தை கூறலாம். இதற்கு எந்த வித கட்டுப்பாடும் கிடையாது.
தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு ஒரு 5 நிமிடம் அவன் முன் அமர்ந்து தூய நினைவோடு தூய அன்போடு அவன் முன் அவன் நாமத்தை சொன்னால் அவன் மனமும் உருகும் அவன் அருளும் கிடைக்கும்.
ஓம் நமசிவாய
சிவ நமசிவாய
சிவாய நம சிவ
சிவ சிவ நம சிவ
சிவாய நம சிவாய.
அதன் பிறகு நீங்கள் இயல்பாக உங்கள் பணிகளை தொடரலாம்.
அனைத்தும் ஜயமே அனைத்தும் இன்பமே
சிவாய நம என சொல்வோர்க்கு அபாயம் ஒருபோதுமில்லை.
ஓம் நம சிவாய
திருச்சிற்றம்பலம்
இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து.
அன்புள்ள ஐயா ,
ReplyDeleteஉங்களின் கருத்து உண்மையான கருத்து .இதில் எந்த மாற்றமும் இல்லை .
உங்களுக்காக சிவவாக்கியரின் கருத்து நிறைந்த ஒரு பாடல்..
சிவாயம் என்ற அக்ஷரஞ் சிவனிருக்கும் அக்ஷரம்
உபாயமென்று நம்புவதற்கு உண்மையான அக்ஷரம்
கபாடம் அற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம்இட் டழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே ..
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
மிகவும் பொருள்பதிந்த பாடல். இந்த மாதிரியான பாடல்களை தொகுத்து தங்களது ப்ளாக்கில் தனி தலைப்பாக பதித்தால் அனைவருக்கும் இந்த பாடல் சென்றடையுமல்லவா. இதன் மூலம் பலரும் பல தகவல்களை தெரிந்துகொள்வார்கள்.
ReplyDeleteதவறாக எண்ணவேண்டாம் மனதில் தோன்றியதை கூறினேன்.
நன்றி.
திருச்சிற்றம்பலம்.
வணக்கம் தோழரே,
ReplyDeleteஉண்மைதான் இறைநாமத்தை சொல்வதில் என்ன வேறுபாடு ? என்ன தகுதி ?
நாமாவளியை யாரும் சொல்லலாம்..
கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லா தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே
என்பது திருஞானசம்பந்தரது திருவாக்கு..
ஐந்தெழுத்து ஓதுவோம் அரன் அருள் பெறுவோம்.
நல்ல ஆக்கம் ஐயா.. வாழ்த்துக்கள்.
http://sivaayasivaa.blogspot.com
அன்புடன், சிவ.சி.மா.ஜா