Monday, 19 December 2011

சனிஷ்வரரின் அதீத அருள் பெருக!!!

சனிஷ்வரரின் அதீத அருள் பெருக!!!திருக்கொள்ளிக்காடு! - திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள திருநெல்லிக்காவிலிருந்து தெங்கூர், கீராலத்தூர் வழியாக இத்தலத்தை அடையலாம். சனி பகவானின் தோஷம் நீக்கும் தலங்கள் வரிசையில் இது தலையாயது.

சுவாமிபெயர் - அக்கினீசுவரர், தேவியார் - பஞ்சினுமெல்லடியம்மை.

இத்திருக்கோயிலை வலம் வந்து சனி பகவானை வழிபட்டுத் திருக்கொள்ளி அக்னீஸ்வரர் திருமுன்பு வீழ்ந்து வணங்குபவர்களின் சனி தோஷத்தைத் தன் ஜோதியால் எரித்துச் சாம்பலாக மாற்றுபவன் அவ்விறைவன் என்பதைத் தொன்மை நூல்கள் கூறுகின்றன.
1,500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இத்திருக்கோயிலை மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் கற்கோயிலாகப் புதுப்பித்தான். இக்கோயிலில் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள், முதலாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டு, அவனது மகன் முதல் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள், பிற சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன.

மேலும் அறிய
http://www.livingextra.com/2011/07/blog-post_28.html

தல வரலாறு

செய்த தவறுக்காக முற்றிலும் பலம் இழந்த சனி பகவான் , பின்பு மனம் வருந்தி, வசிட்ட முனிவரின் யோசனைப்படி அக்கின்வனம் எனும் இத்தலத்தில் கடுமையான தவமியற்ற ஈசன் மனமிரங்கி அக்னி உருவில் தரிசனம் தந்து சனி பகவானை பொங்கு சனியாக மறு அவதாரம் எடுக்கச் செய்ததுடன் இத்தலத்திற்கு வந்து தம்மையும் சனீஸ்வரரையும் வழிபடுவோர்க்கு சனிக்கிரகம் தொடர்பான எல்லா துர்பலன்களும் விலகும் என அருளினார். பொங்கு சனியாக அவதாரம் எடுத்து குபேர மூலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நன்றி லிவிங் எக்ஸ்ட்ரா தளம்

Saturday, 10 December 2011

பஞ்ச பூதங்கள்

நிலம் நீர் அக்னி காற்று வானம் இதுதானே பஞ்ச பூதங்கள் இதில் நாம் அனுபவிப்பது எத்தனை? நான்கை மட்டும்தான், நிலம் நீர் அக்னி காற்று.

இதில் வானம் என்பது என்ன? கொஞ்சம் யோசித்து பாருங்கள்?

ஆனால் இந்த பஞ்ச பூதங்களில் பெருமை வாழ்ந்தது வானம்... ஆனால் அதை அடைவது எளிதாக்குவது அக்னி. அக்னியை பொறுத்தவரையில் அது அக்னியாக இருக்கும்வரையில் அதை ஒன்றும் செய்ய முடியாது அதுதான் அக்னியின் சிறப்பே. அதுதான் சிவனின் மகிமையே... அந்த அக்னி சொரூபன் தான் அண்ணாமலையான் உண்ணாமலை உடனுரையான்உருவமிள்ள ஒன்றுதான் வானம் நம் கண்ணின் பார்வைத்திறன் அப்பால் உள்ள பகுதி நீலமாக தெரியும் அதுதான் வானம்..... அதுதான் கடவுள்.

ஆனால் அதை அறிந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள்தான் சித்தர்கள் முனிவர்கள் ரிசிகள்... நாமெல்லாம் எங்கே?

மனிதனின் கையில் பட்ட அத்தனையுமே அவனுக்கு சொந்தமாக உள்ளது... அவன் சொன்னபடி அடிமை பட்டு அவன் செயலுக்கு ஏற்ப ஆடிகொண்டுள்ளது சரிதானே?

ஆனால் மனிதனின் கையில் அகப்படாத காற்றும் வானமும் அதனுடைய போக்கில் உள்ளது... அதை அடைவதும் அதை அறிவதும் தான் மனித பிறப்பின் நோக்கம் என்பது என் கருத்து.. காற்று அடக்கி அதாவது மூச்சை அடக்கி ஆள கற்றுகொண்டாலே ஒருவன் பாதி முக்தி அடைந்து விடுகிறான் அதன் பின் வெட்ட வெளி என்கிற அந்த பரப்பிரமத்தை அடைவது எளிதாகிறது....

அதை அடைபவர்கள் எத்தனை பேர்? அதற்குத்தான் அனைவரும் போராடுகிறோம். அதற்குத்தான் இறைவனின் அருள் தேவை அதனாலதான் அவனருளால் அவனை வணங்குகிறோம்....

அவன் அருளால் அவனை அடைதல் மகிழ்ச்சிதானே....

எல்லாம் அவன் செயல்.... அந்த அண்ணாமலையானின் திருநாளில் எழுத தோணியதை இங்கு எழுதிவிட்டேன்......

கார்த்திகை திருநாளில் அனைவரும் ஈசனின் அருளை பெற்று அனைவரும் அனைத்தையும் அடைய என் பரம்பொருள் தாழ் வணங்குகிறேன்