Sunday, 27 March 2011

ஓம் நமசிவாய - யாரெல்லாம் கூறலாம்?

ஓம் நமசிவாய - யாரெல்லாம் கூறலாம்?

நல்ல மனமும் நல்ல குணமும் உள்ள யாரும் நம சிவாய மந்திரத்தை கூறலாம். இதற்கு எந்த வித கட்டுப்பாடும் கிடையாது.

தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு ஒரு 5 நிமிடம் அவன் முன் அமர்ந்து தூய நினைவோடு தூய அன்போடு அவன் முன் அவன் நாமத்தை சொன்னால் அவன் மனமும் உருகும் அவன் அருளும் கிடைக்கும்.

ஓம் நமசிவாய
சிவ நமசிவாய
சிவாய நம சிவ
சிவ சிவ நம சிவ
சிவாய நம சிவாய
.

அதன் பிறகு நீங்கள் இயல்பாக உங்கள் பணிகளை தொடரலாம்.

அனைத்தும் ஜயமே அனைத்தும் இன்பமே

சிவாய நம என சொல்வோர்க்கு அபாயம் ஒருபோதுமில்லை.

ஓம் நம சிவாய

திருச்சிற்றம்பலம்

இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து.

Sunday, 13 March 2011

விநாயகரின் திருநாமங்கள் 21

விநாயகரின் திருநாமங்கள் 21 உண்டு.1.கணேசன்
2.ஏகதந்தன்
3.சிந்தாமணி
4.விநாயகன்
5.டுண்டிராஜன்
6.மயூரேசன்
7.லம்போதரன்
8.கஜானனன்
9.ஹேரம்பன்
10.வக்ரதுண்டன்
11.ஜேஷ்ட ராஜன்
12.நிஜஸ்திதி
13.ஆசாபூரன்
14.வரதன்
15.விகடராஜன்
16.தரணிதரன்
17.சித்திபுத்திபதி
18.பிரம்மணஸ்தபதி
19.மாங்கல்யேசர்
20.சர்வ பூஜ்யர்
21.விக்னராஜன் ஆகியன ஆகும்.

நன்றி ஒர்டுப்ராஸ் தளம்

Friday, 11 March 2011

காசியின் தண்டல் நாயகன் தண்டபாணி

இணையத்தில் தேடியதில் கிடைத்தது. இந்த தகவல் காசிக்கு செல்லும் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் தருகிறேன். அனைவரும் அறிக தண்டபாணியின் தரிசனம் பெருக.

காசியின் தண்டல் நாயகன் தண்டபாணி


இவரை பற்றிய இன்னொரு கருத்தும் கதையும் இதோ,
நன்றி ஞானம் டாட் நெட் இணையதளம்


காசிக்குப்போயும் பாவம் தொலையலியே !
காசிக்குப் போனால் பாவம் தொலையும் என்பார்கள். காசியிலேயே பாவம் செய்பவர்கள் இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் தண்டபாணி பைரவர்.

காசியில் இரண்டு பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று காலபைரவர் கோயில், இது
மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், இதன் அருகிலுள்ள "தண்டபாணி மந்திரில்' உள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார்.

இவரைத் தெரிந்து கொள்வோமா!

குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். இவர்களில் குணபத்திரன் என்பவர் கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தார். இவர் தவமிருந்து பெற்ற பிள்ளை ஹரிகேசவன். இவர் சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். குணபத்திரன், தன் மகனை தங்கள் குல தலைவரான குபேரனை வழிபடும் படி தூண்டினார்.
""ஆஹா! குபேரனா நம் தலைவர்! அவர் சிவபெருமானிடம் இருந்து சகலநிதிகளையும் பெற்று உலகத்திற்கே பொருள் தருபவராயிற்றே! அவரது தயவிருந்தால், அவரே என்னை சிவபெருமானிடம் சேர்த்து விடுவாரே!'' என்று அப்போதும் சிவபெருமானின் பெருமைகளையே பேசினார்.

ஒருநாள், சிவனைக் காண வேண்டும் என்ற உந்துதல் அதிகமானது. அவர் காசியில் வசிக்கிறார் என்பதால், அங்கே செல்ல விரும்பினார் ஹரிகேசவன். வீட்டை விட்டு வெளியேறி வெகுதூரம் சென்று, சிவபெருமானை நினைத்து தவத்தை தொடங்கி விட்டார். உணவு. உறக்கம் மறந்து தியானத்தில் ஆழ்ந்ததால், எலும்பும் தோலுமாகி விட்டார். இத்தகைய பக்தனுக்கு அருள்புரிய வந்தார் சிவபெருமான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த தன் பக்தனை எழுப்பினார்.

ஹரிகேசவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் முன்னால் ஒரு பெரிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
பக்தர்கள் "ஹரஹர சங்கர, சிவசிவ சங்கர' என்ற கோஷம் எழுப்பியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிஷப வாகனத்தில் சிவன் காட்சியளித்தார். ""ஹரிகேசவா! நீ விரும்பியபடியே காசிக்கு வந்துவிட்டாய். உன் தவத்தை மெச்சினேன். உன் விருப்பப்படி இனி காசியிலேயே தங்கியிரு. இவ்வூரே எனக்கும் மிகவும் பிடித்தமானது. உனக்கு ஒரு பணி தருவேன், அதைச் செய்ய வேண்டும்,'' என்றார்.
தலையை மட்டும் அசைத்து பதிலேதும் சொல்லாமல், கைகட்டி வாய் பொத்தி நின்ற கேசவனிடம்,""இந்த ஊருக்குள் யார் நுழைந்தாலும் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். இங்குள்ள எல்லாக் கணங்களுக்கும் (காவல் பூதங்கள்) நீயே தலைவன்.

நீயே இங்கு வருவோருக்கு உணவும், நீண்ட ஆயுளும் தர வேண்டும். இவ்வுலக வாழ்வு பொய்யானது என்ற ஞானத்தையும் அருளவேண்டும். இனி இந்த காசியின் அதிகாரி நீ தான். இங்கே வருபவர்கள் பாவ சிந்தனையுடன் திரிந்தால், அவர்களை இந்த ஊரை விட்டு வெளியே செல்லும்படியான மனநிலையை உருவாக்க வேண்டும்.

இங்கே நல்லவர்கள் மட்டுமே தங்க வேண்டும். உன்னை மக்கள் "தண்டபைரவர்' என்பர். உனக்கு தேவ சரீரம் தருகிறேன்,'' என்றார்.

ஹரிகேசவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்போது உருவானது தான் "தண்டபாணி மந்திர்'. காசிக்குப் போனால், இந்தக் கோயிலுக்குச் சென்று பிறப்பற்ற நிலையை அடைய வேண்டி வாருங்கள்

Sunday, 6 March 2011

ஸ்ரீ காளஹஸ்தி திருத்தல வரலாறு

ஸ்ரீ காளஹஸ்தி திருத்தலம்

ஸ்ரீ(சீ) - காளம் - அத்தி = சிலந்தி - பாம்பு - யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்.இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே, பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது; அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் - ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல வரலாற்றுச் செய்தி. (பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது.)


'திருமஞ்சனக் கோபுரம் ' எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால், நேரே பொன்முகலி ஆறு தெரியும்; ஆற்றுக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. இவ்வழியேதான் திண்ணனார் (கண்ணப்பர்) பொன்முகலி நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.


சண்டேசுவரர் சந்நிதி - மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது; முகலாயர் படையெடுப்பின்போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர்; அவ்வாறு இங்கு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் இதைப் பிரதிஷ்டை செய்துவைத்து அவ்விடத்தை மூடிவிட, வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி, உடைத்துப்பார்த்து, ஒன்றும் கிடைக்காமையால் திரும்பிவிட, பின்பு சிலகாலம் கழித்து மூலவர் சந்நிதி திறக்கப்பட்டதாம். அப்போது முன் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, படையெடுப்பாளர்களால் உடைக்கப்பட்ட பாணமே இது என்று சொல்லப்படுகிறது.


விரிவான ஆலய வரலாறை அறிய இந்த இணைய முகவரியை சொடுக்கி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியாதவர்கள் தங்களின் ஈ மெயில் தரவும் அவர்களுக்கு தனிமடலில் அனுப்பி வைக்கிறேன்.


http://www.mediafire.com/?90bp2jy9q5358gb

Tuesday, 1 March 2011

உங்களின் தேடல்தான் என்ன? - 3

நிண்ட இடைவேளைக்கு பிறகு இதை தொடர்கிறேன். நேரமின்மை மற்றும் வேலை பளு .

சரி இந்த சிவராத்திரியில் உங்கள் தேடல் நல்லவையாக இருக்கட்டும். இப்படி சொல்வதால் எனது செயல் நான் நல்லவனா என்பது எனக்கு தெரியாது., யாரும் காலத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. எல்லாம் அவன் அருளாலே என்று விட்டுவிடுங்கள் . ஆனால் அவனை உறுதியாக பிடித்துகொள்ளுங்கள் அது போதும்.

தேடி தேடி போகும் பொது அது விலகித்தான் செல்லும். அதுவும் இந்த கலிகாலத்தில் மிகவும் கடினம் அவனை அடைவது., அப்படி மீறி அவனை அடைபவர்கள் எப்பேர் பட்டவர்கள் என்று சொல்லித்தெரிவதில்லை.

எப்படி எப்படியோ இறைய தேடுபவர்களில் இப்படியும் அடையலாம் என்று ஒரு குறிக்கோளே இல்லாமல் தேட்டுபவர்களில் நானும் ஒருவன். பக்கத்திலேயே இருப்பான் ஆனால் இருக்கமாட்டான் அவன்தான் இறைவன்,.ஆனால் எப்போதும் அவன் நம்மை வழி நடத்துவான் என்று உறுதியாக நினைத்து இந்த சிவராத்தியில் முடிந்த வரை கண் விழித்து அவனை போற்றி புகழ்ந்து தொழுது அவன் அருளை அடைய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை சொல்லிகொள்கிறேன்.

சிவமே என்று தொழுவோர்க்கு
அகமே சிவம்


எனும் தத்துவத்தை எளிதில் புரியவைப்பான் அவன்.
அனைவருக்கும் எனது சிவராத்திரி வாழ்த்துகள்

சிவ சிவ

எனும் மந்திரத்தை சிரமேற்கொண்டு இந்த சிவராத்திரியை அழகாக அமைத்திடுங்கள்