Sunday, 26 December 2010

ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்

ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்


ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.இம் மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும்.

ஏனென்றால் புராண காலத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின் பரிகாரத்தலமாக இருந்துள்ளது. ஆனால் எப்படியோ இன்று மாறிவிட்டது.

Thursday, 16 December 2010

உங்களின் தேடல்தான் என்ன? - 2

உங்களின் தேடல்தான் என்ன?

வாழ்க்கையில் பல கரடு முரடான பாதைகளை சந்தித்து வந்தவன் நான். கடவுளை காண முடியாதா என ஏங்கிக்கொண்டிருக்கும் பல இதயங்களை போல என் இதயமும் காத்து இருக்கிறது என்பது உண்மை. ஆனால் பல வடிவங்களில் பல ஆலயங்களில் மனித வடிவில் அவரின் லீலைகளை கண்டுள்ளேன். கனவுகளில் முதலில் காட்சி அளித்து பின்னர் அதே ஆலயத்தை நேரில் தரிசிக்கும் பலனையும் பெற்றுள்ளேன்.

இதற்காக எனக்கு குரு இருக்கிறார் என்று எண்ண வேண்டாம். அவனையே குருவாக முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் போது அவர் அருள் நிச்சயம் கிடைக்கும்.

உங்களின் உண்மையான தேடல் என்ன என்பதை கண்டறிந்த பின் அந்த கோரிக்கையை அவர் முன் வையுங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார்.

பல வலை தளங்களில் அனவரும் குரு எப்படி கிடைப்பார்? எனக்கு அந்த பாக்கியம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்,

அவன் அருளால் அவந்தாள் வணங்கு, அனைத்தும் அம்சமாக கிடைக்கும்.

அதற்காக உங்களின் நேரத்தை வீணடிக்காதிர்கள் என்பதே என் கருத்து.

இறைவன் யாருக்கு எப்போது அருள்வான் என்பது யாருக்குமே தெரியாது.

அவன் அன்றி ஓரணுவும் அசையாது என்பது போல அவன் செயலும் அவனை அன்றி யாரும் அறியார். இது ஏற்கனவே எழுதப்பட்டதோ எழுதப்படாததோ என்பது எனக்கு தெரியாது ஆனால் இதுதான் நிசப்தமான உண்மை.

அண்ட சராசரங்களும் அகில லோகத்தையும் ஆட்டுவிக்கும் கடவுளுக்கு தெரியாதா நமது தேடல் என்னவென்று தேவை என்னவென்று.அவனை நாடி
அவன் அருளை தேடி
அவன் பாதம் தொழுவோர்க்கு
அன்பே உருவாக
அவன் காட்சி கிடைக்கும்...........!!!


தேடலின் அடுத்தப்பதிவு மீண்டும் நேரம் வரும்போது தொடருவேன்.

Tuesday, 7 December 2010

கருட தரிசனம் - கும்பாபிஷேகம்

கருட தரிசனம் - கும்பாபிஷேகம்சமீபத்தில் நான் இந்த பதிவை போகி மூலமாக பார்த்தேன். பிறகு இணையத்தில் தேடியதில் தமிழ் இந்து. நெட் தளத்தில் இன்னும் பிற தலங்களிலும் இதே பதிப்பை பார்த்தேன். அதற்கு பின்னூட்டமும் அளித்தேன். ஏனோ தெரியவில்லை எனது பின்னூட்டத்தை அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆகவே எனது கருத்தை என்னுடைய இந்த வலையில் சொல்லலாம் என்றெண்ணி இங்கே இந்த பதிவு.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

கருட தரிசனம் கர்ம பலன் நீங்கும்.

முதல் வரி முன்னோர்கள் சொன்னது. இரண்டாவது வரி என்னுடைய கருத்து.

அவ்வளவு எளிதில் எல்லோரும் கருடனை காண முடியாது. எந்த தினத்தில் காணுகிறோமோ அந்த தினத்திற்கு என்று பலன்கள் உண்டு. உலகலந்த பெருமானின் வாகனம், உலகை காக்க தர்மத்தை நிலை நாட்ட பிறவி எடுக்கும் பகவானின் அமர்வு பீடம் கருட தேவன்.

கருட தேவனுக்கு என்று காயத்ரி மந்திரமும் உண்டு.

இங்கே நான் சொலவது என்ன வென்றால், அவர்களின் கருத்துப்படி கூட்டம் சேரும் இடத்தில் கருடன் வருவார் என்கிறார்கள்,

அப்படியானால் ஏன் அரசியல் கூட்டம் போடும் இடங்களிலும் திருவிழாக்காலங்களில் மக்கள் அலை மோதும் இடங்களிலும் கருடன் வருவதில்லை.

ஏன் கிரிக்கெட் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி இருக்கும்பொது ஏன் அங்கே கருடன் வட்டமடிக்க வருதில்லை.. அவர்கள் சொல்வதுபடி பார்த்தால் இது நடக்க வேண்டுமல்லவா?

ஆனால் கோயில் கும்பாபிசேகம் நடைபெரும் இடங்களில் கருடன் வருகிறார் என்றால் அதுதான் தெய்வத்தின் அருள் என்பது. இதில் சிறிய கோயில் பெரிய கோயில் என்பதில்லை.
ஏனோ என்னால் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆகவேதான் இந்த பதிப்பு. என் மனதில் தோன்றியதை இங்கு பதிக்கிறேன் அவ்வளவே.
கருட தரிசனம் காணும்போதெல்லாம் பாப விமோசனம்.

Thursday, 2 December 2010

உங்களின் தேடல்தான் என்ன? - 1

உங்களின் தேடல்தான் என்ன?

இந்த கேள்வியை நீங்கள் படித்த உடன் உங்களுக்குள் கன்டிப்பாக தேடிப்பார்ப்பீர்கள் என்னதான் உங்களின் தேவை என்று.

ஆனால் ஒரு நிமிடம் இந்த கேள்வியை படித்ததும் தயவு செய்து உங்களின் தேடல்தான் என்ன என்று அமைதியாக ஒரு நிமிடம் யோசித்து தெளிவு பெருங்கள்.


பிறகு அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்.

அதற்கான முயற்சியில் இறங்குங்கள்.

அனைத்தும் அவன் அருளால் அம்சமாக நடந்தேறும்.

ஏனோ தெரியவில்லை சில நேரங்களில் ஏன் பிறந்தோம் என்று யோசிப்பேன். ஆனால் விடை கிடைக்காமல் விட்டு விட்டு மீண்டும் மனம் போன போக்கில் வாழ்க்கையை செலுத்த ஆரம்பித்துவிடுவேன்.


இது நாள் வரையில் என் வாழ்க்கையை நடத்துபவனும் அவனே நடத்திகொண்டிருப்பவனும் அவனே என்னை நல்லது செய்ய வைப்பனும் அவனே தீயது செய்ய வைப்பவனும் அவனே.

என்ன நானே தவறு செய்தாலும் அவன் தான் பொறுப்பு என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு தேற்றிக்கொள்வேன். அதனால்தானோ என்னவோ மீண்டும் அதே தவறை செய்தாலும் அடுத்த முறை செய்ய முடியாமல் தடுத்தும் விடுகிறான்.


பலர் தேடித்தேடி கடைசிவரையில் விடைகாண முடியாமல் அப்படியே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள்.

சிலர் விடை கன்டுபிடித்தாலும் கடைந்தேர முடியாமல் போய்விடுகிறது, அதற்கு காரணம் இந்த கலியுகம்,.

பலர் குருவைத் தேடித் தேடித் நேரத்தை செலவழித்து விடுகின்றனர்.ஆனால் இந்த கலியுகத்தில் குரு கிடைக்கவேண்டியவர்களுக்கு மட்டும்தான் குரு கிடைப்பார் என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இந்த இறையை நீங்கள் மனதார நினைத்து நினைவால் தினமும் ஆராதனையும் பாராயணமும் செய்தால் அந்த இறையே குருவாக உங்களுக்கு வந்துத்திப்பார். அல்லது உதிக்க வைப்பார். ஏன் இது??? நிற்க, யோசிக்க.


இறையே உங்களுக்காக உதவ வரும்போது ஏன் ஒரு குரு...அவரே குருவாகி விடுவாரே எனும்போதினிலே..!

அருவாகி

உருவாகி நீயே

குருவாகி

உன்னில் என்னை கலந்தாகி

என்னுள் உன்னை உருவாக்கி

எனை நீ அருவாகும் போதினிலே....


என்னிறையே உன்னை என்னென்று போற்றுவேன்...


மீண்டும் இதன் அடுத்த பதிப்பு நேரம் வரும்போது தொடருவேன்.

சதாசிவலிங்கத்தின் சர்வ தரிசனம்

சதாசிவலிங்கத்தின் சர்வ தரிசனம்

இவர் உள்ள இடம் பரலி வைத்தியனாதரின் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளார்.

அதுவும் காலகாலமாக இவருக்கு வழிவழியாக இவரை வணங்கி வந்த பரம்பரை ஸ்தாபர்களின் ஜீவ சமாதிகளுக்கு அருகில் அமந்துள்ளது இந்த ஆலயம். இங்கே பூமிக்கடியில் ஒரு மகான் ஜீவ சமாதியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதோ சதாசிவத்தின் சர்வ தரிசனம்

ஆலயங்களில் உள்ளே போகும்போது கொஞ்சம் அதிர்வுகள் தெரியும். இந்த அதிர்வுகளை நான் பல ஆலயங்களில் மூலவரை தரிசனம் செய்யும்போது உணர்ந்துள்ளேன். அதுபோல அதிர்வுகளை இந்த சிறிய ஆலயத்திலும் கண்டேன். நீங்களும் பரலி வைத்திய நாதரை தரிசனம் செல்ல நேர்ந்தால் இந்த ஆலயத்தையும் தரிசனம் செய்து வாருங்கள்.
படம் பெரியதாக தெரிய படத்தின்மீது கிளிக் செய்யவும்

Wednesday, 24 November 2010

அதிசய நந்தி தேவர்கள்


அதிசய நந்தி தேவர்கள்

மகாராஷ்டிராவில் உள்ள பரலி வைத்தியனாதரின் ஆலயத்தில் நந்தி தேவர்கள் அருள் பாலிக்கின்றனர்.

அதாவது எல்லா சிவாலயங்களிலும் ஒரு நந்திதேவர்தான் மூலவரின் முன்னாடி அமர்ந்து அவரின் மூச்சுக்காற்றால் தாலாட்டிக்கொண்டிருப்பார். ஆனால் ஜோதிர்லிங்கத்தலமான பரலி வைத்தியனாதரின் ஆலயத்தில் உள்ள மூலவரின் முன்னாடி மூன்று நந்திதேவர்கள் உள்ளனர். முதன்முதலாக நான் அந்த தரிசனத்தை பார்த்த போது ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனேன். ஒவ்வொரு ஆலயத்தில் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கத்தான் செய்கிறது.

அப்படி இருக்கும் நந்திதேவரின் தரிசனம் இப்போது உங்களுக்காக.படம் பெரியதாக தெரிய படத்தின்மீது க்ளிக் செய்யவும்.

அடுத்த பதிவு காணுதற்கரிய சதாசிவ லிங்கம். அமைந்துள்ள இடம் பரலி வைத்தியனாதர் ஆலயம் அருகில் இன்னும் பல தகவல்களுடன் அடுத்த பதிவு

Sunday, 21 November 2010

வைத்தியனாதரின் தரிசனம்


வைத்தியனாதரின் தரிசனம்

ஜோதிர் இலிங்க தலங்களில் இரண்டு தலங்கள் இன்றும் சர்ச்சையில் உள்ளன. அதில் ஒன்று பரலி வைத்தியனாதர் மற்றொன்று அவுன்டா நாக்னாத். ஆதி காலத்தில் இந்த தலங்களைத்தான் ஜோதிர்லிங்கதலங்களாக சொல்லி உள்ளனர். ஆனால் இன்றைய நிலவரப்படி பார்த்தால் துவாராகா நாகேஸ்வரையும் பீகாரில் உள்ள வைத்தியனாதரையும் ஜோதிர் லிங்கங்களாக சொல்கின்றனர்.

சமீபத்தில் நான் இந்த தலங்களை தரிசித்தேன். அதில் அவுன்டா நாக்னாத் ஆலயத்தில் செல்லும்போது கேமரா எடுத்து செல்லாமல் போய்விட்டேன். ஆனால் பரலி வைத்தியனாதர் ஆலயத்தில் தரிசனம் செய்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பினேன். நான் கன்ட வைத்தியனாதரின் தரிசனம் உங்களுக்காக,மூலஸ்தானத்திற்குள் செல்ல முடியாத போது இவரை வாசலில் வைத்து தரிசனம் செய்வார்கள். அதாவது குறிப்பிட்ட நேரம் இவரை வெளியே வைப்பார்கள் தரிசனத்திற்காக அதன் பிறகு மூலஸ்தானத்திற்குள் இந்த இடத்தில் வைத்துவிடுவார்கள்.
படம் பெரியதாக தெரிய படத்தின்மீது கிளிக் செய்யவும்.

அடுத்த பதிவு வைத்தியனாதரை எப்போதும் தனது மூச்சுக்காற்றால் தாலாட்டும் நந்தி தேவர்கள் ஆம் நந்தி பகவான்கள். இந்த ஆலயத்தின் அடுத்த சிறப்பு இது. மூன்று நந்திகள் வரிசையாக இருக்கும் அடுத்த பதிவில்....

Friday, 12 November 2010

அதிசய அபூர்வமான நந்தி - நிற்கும் நந்தி பகவான்.

அதிசய அபூர்வமான நந்தி - நிற்கும் நந்தி பகவான்.

தீபாவளி அன்று உஜ்ஜயினி மகா காளேஸ்வரரின் தரிசனம் கண்டேன். நான் பல முறை மகா காளேஸ்வரரை தரிசித்துவிட்டு இந்த ஆலயத்தையும் தரிசனம் செய்வேன். ஆனால் எப்போது நான் இதை குறிப்பாக கவனித்தது இல்லை, என்ன என்று கேட்கிறீர்களா?

அதுதான் நிற்கும் நந்தி.

உஜ்ஜயினியில் உள்ளூர் ஆலய தரிசனம் செய்யூம்போது பார்த்த பல படங்களை ஏற்கனவே போட்டுள்ளேன். ஆனால் இந்த ஆலயத்தின் போட்டோவை இப்போதுதான் பதிக்கிறேன்.

இங்கு உள்ள சிவனின் பெயர் குண்டேஸ்வரர். சிவன் விஷ்னு மற்றும் வாமன அவதாரம் எடுத்த விஷ்னு திருப்பதி ஏழுமலையானை ஒரு சேர இந்த ஆலயத்தின் கருவரையில் தரிசிக்கலாம்.குன்டேஸ்வரர் மகாதேவ்ஆலயத்தின் முன் நின்ற நிலையின் அருள் பாலிக்கும் நந்தி தேவர்
அதாவது மும்மூர்த்திகளும் நின்று இருக்கும்போது தனது தெய்வம் சிவனும் நிற்கும்போது தாம் அமர்வது முறையல்ல என்று மரியாதையின் நிமித்தமாக இந்த நந்தி தேவர் நிற்கிறார் என்பது புராணம்.

உங்களுக்காக அவரின் தரிசனம்


அதாவது சாந்திபனி ஆஸ்மரத்தின் உள்ளே உள்ளது இந்த ஆலயம். இங்குதான் பகவான் கிருஷ்ணர் குருகுல வாசம் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.


அடுத்த பதிவு மகாராஸ்டிராவில் அமைந்துள்ள ஜோதிர்லிங்கஸ்தலமான பரலி வைத்திய நாதரின் தரிசனம்.

Thursday, 11 November 2010

அனைத்திற்கும் மூலாதார மந்திரம்சிவமயம்.ஒன்றே பிடி

உறுதியாய் பிடி

இறுதிவரை பிடிஇதை சும்மா பார்த்தால் ஒன்றுமில்லை ஆனால் அலசி ஆராய்ந்து வேரூன்றி பார்த்தால் இதைவிட வேறில்லை.எனது அடுத்த பதிப்பு அதிசய நந்தியின் அபூர்வ தரிசனம்.

Tuesday, 9 November 2010

யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்

யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்

டி.ஆர். பரிமளரங்கன்

மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுகிறது.

மிகவும் பழமையானது இத்திருக்கோவில். ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக் கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.

""யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர் கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்'' என்று சொல்கிறார் ஆலய குருக்கள் சதீஷ் சிவாச்சாரியார். சுவாமியைத் தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.

மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சந்நிதியில் வேதாந்த நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் உள்ளாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிட்டாத காட்சி. நமக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர். இந்த அன்னையின் உபதேசக் கருணைப் பார்வை யால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று சுமார் ஐந்தடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்?

சனி பகவான் இறைவனைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் அம்பாளிடம், ""நாளை காலை ஏழேகால் நாழிகைப்பொழுது ஈசனைப் பிடிக்கப் போகிறேன்'' என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள் அம்பாள்.

எப்படியும் ஈஸ்வரனை ஏழேகால் நாழிகை பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மறுநாள், ஈஸ்வரனைப் பிடிக்க சனிபகவான் மெதுவாக வந்தார். அப்போது அன்னை, ஈஸ்வரனைப் பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.

அங்கு வந்த சனி பகவான் அம்பாள் அரச மரத்தடியில் நிற்பதைப் பார்த்து ஈஸ்வரன் எங்கே இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றுவிட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து,

""என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?'' என்று கேட்டாள். சனி பகவான், ""நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்த தல்லவா? அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம்'' என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள்முன் நின்றார். சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.

இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, ""ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள். எனவே, ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத் தைத் தணித்தாள் அம்பிகை. அம்பா ளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபி யானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள். அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். ""ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை ஒருசேர தரிசித் தால் அந்தப் பாவம் நீங்கும்'' என்று கூறினார்.

உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.

இதனைக் கண்ட நாரதர், ""இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படி யிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்!'' என்று போற்றிப் புகழ்ந்தார்.

""பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங் களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்'' என்று நாரதர் சொன்னார். அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.

இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீவிசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தி யருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார். இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர் களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, ""மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்'' என்றார்.

மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், ""பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்'' என்று சாபமிட்டார். அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, ""மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது'' என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.

சாந்தமடைந்த அகத்தியர், ""மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.

உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார். இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார். அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கி றார்கள்.

இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணி களைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள். இந்தக் கவசத்தினைத் தயார் செய்ய உதவியவர் திருச்சியைச் சேர்ந்த பக்தர் சிவகுமார் என்பவர்.

மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்எபெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலக்காது இல்லை.

பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், ""நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்'' என்று ஆறுதல் கூறினார்.

அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகிவிடுகிறது என்கிறார்கள்.

ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க லாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது. இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார் கோவில் குருக்கள்.

இக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார். ஆலயத்தின் வடக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இவர், நவராத்திரி விழாவின்போது தன் மாப்பிள்ளையான சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து, தன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வாராம். இந்தச் சிவாலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் உள்ளது. இந்தப் பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவதம்பதி யர் அங்கே வருகை தருவது வழக்கமாம். அவ்வாலயத் திலுள்ள பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார்.

அவருக்கு அருகில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதியின் பின்புறம் வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக் காட்சி தருகிறார்கள்.

கன்னி மூலையில் கபால விநாயகருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பர்.

இக்கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.

இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் புராணப் பெயர் தேவராஜபுரம்.

பூஜைக்குரிய பொருட்களை நாம் வாங்கிச் செல்வது நல்லது. குருக்களின் வீடு அருகிலேயே இருப்பதால் நாம் செல்லும் நேரத்தில் தரிசனம் காணலாம். விரைவில் கும்பாபிஷேகம் காணவிருக்கும் இந்தக் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. பக்தர்கள் இதில் கலந்து கொண்டு இறையருள் பெறலாம்.

சிறப்புச் செய்தி

தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது.

சூரிய ஒளி சிவலிங்கத்தின்மீது படர் வதற்கு ஏற்ப கிழக்கு வாசல் சாளரம்போல் அமைக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடுமாம்.

நன்றி தமிழ் இந்து மதம் இணையதளம்.

Wednesday, 3 November 2010

கொங்கணவரின் கும்மிப்பாட்டு

கொங்கணவரின் கும்மிப்பாட்டு

18 சித்தர்களில் ஒருவரான கொங்கணவர் இயற்றிய நூல்களில் இதுவும் ஒன்று. மிகவும் அழகாக செந்தமிழில் புரியும் வகையில் எழுதி உள்ளார்.

இதை நான் தமிழ் நண்பர்கள் வலைதலத்தில் இருந்து எடுத்து உங்களுக்காக பகிர்ந்துகொள்கிறேன்.

நன்றி தமிழ் நண்பர்கள வலைதளம்.

இன்னும் நிறைய சித்தர்களின் பாடல்கள் உள்ளது அங்கு சென்று படியுங்கள். முடிந்தவரையில் நானும் பக்ரிந்துகொள்கிறேன்.

மீண்டும் ஒரு முறை அந்த வலைதளத்திற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்

கொங்கணச் சித்தர் வாலைக் கும்மி

விநாயகர் துதி

பின் முடுகு வெண்ப கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற
செல்வியின்மேற் கும்மிதனைக் செப்புதற்கே - நல்விசய
நாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்ச
பாதம்வஞ்ச நெஞ்சினில்வைப் போம். 1

கும்ம சத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த
உத்தமிமேற் கும்மிப் பாட்டுரைக்க
வித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை
சித்தி விநாயகன் காப்பாமே. 2

சரசுவதி துதி

சித்தர்கள் போற்றிய வாலைப்பெண் ணாமந்த
சக்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்
தத்தமித் தோமென ஆடும் சரசுவதி
பத்தினி பொற்பதங் காப்பாமே. 3

சிவபெருமான் துதி

எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்
தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்
கங்கை யணிசிவ சம்புவாம் சற்குரு
பங்கயப் பொற்பாதம் காப்பாமே. 4

சுப்பிரமணியர் துதி

ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி
வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்கு
மானைப் பெண்ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்
மால்முரு கேசனும் காப்பாமே. 5

விஷ்ணு துதி

ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்
காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம்
ஆண்டவன் பொற்பதங் காப்பாமே. 6

நந்தீசர் துதி

அந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்
சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்
நந்தீசர் பொற்பதங் காப்பாமே. 7

நூலகும்ம தில்லையில் முல்லையி லெல்லையுளாடிய
வல்லவள் வாலைப்பெண் மீதினிலே
சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்
தொல்லைவினை போக்கும் வாலைப்பெண்ணே! 8

மாதா பிதாகூட இல்லாம லேவெளி
மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்று
பேதை பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று
புகுந்தா ளிந்தப் புவியடக்கம். 9

வேதமும் பூதமுண் டானது வும்வெளி
விஞ்ஞான சாத்திர மானதுவும்
நாதமுங் கீதமுண் டானதுவும் வழி
நான்சொல்லக் கேளடி வாலைப்பெண்ணே. 10

மூந்தச் செகங்களுண் டானது வும்முதல்
தெய்வமுந் தேவருண் டானதுவும்
விந்தையாய் வாலையுண் டானதுவும் ஞான
விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே. 11

அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்
அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்
தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி
பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம். 12

ஆதியி லைந்தெழுத் தாயினாள் வாலைபெண்
ஐந்தெழுத் துமென்று பேரானாள்;
நாதியி னூமை யெழுத்தியவள் தானல்ல
ஞான வகையிவள் தானானாள். 13

ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும்
ஓமென் றெழுத்தே யுயிராச்சு
ஆமிந் தெழுத்தை யறிந்துகொண்டு விளை
யாடிக் கும்மி யடியுங்கடி. 14

செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்
சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்
உகமு டிந்தது மஞ்செழுத்தாம் பின்னும்
உற்பன மானது மஞ்செழுத்தாம். 15

சாத்திரம் பார்த்த்தாலுந் தானுமென்ன? வேதம்
தானுமே பார்த்திருந் தாலுமென்ன?
சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு
சொல்லை யறிந்தல்லோ காணவேணும்? 16

காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்
காரிய மில்லையென் றேநினைத்தால்
காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்
காரிய முண்டுதியானஞ் செய்தால். 17

ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி
வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளே
வாயனு மைந்தாம் எழுத்துக்குள் ளேயிந்த
வாலையு மைந்தாம் எழுத்துக்குள்ளே. 18

அஞ்செழுத் தானதும் எட்டெழுத்தாம் பின்னும்
ஐம்பத்தோர் அட்சரந் தானாச்சு
நெஞ்செழுத் தாலே நிலையா மலந்த
நிசந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே! 19

ஏய்க்கு தேய்க்கு ஐந்செழுத் துவதை
எட்டிப் பிடித்துக்கொளிரண் டெழுத்தை
நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி
நிலையைப் பாரடி வாலைப்பெண்ணே? 20

சிதம்பர சக்கரந் தானறிவா ரிந்தச்
சீமையி லுள்ள பெரியோர்கள்
சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே
தெய்வத்தை யல்லோ அறியவேணும்! 21

மனமு மதியு மில்லாவிடில் வழி
மாறுதல் சொல்லியேயென்ன செய்வாள் ?
மனமு றுதியும் வைக்கவேணும் பின்னும்
வாலைக் கிருபையுண் டாகவேணும். 22

இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்
தீமட்டு திந்தவரி விழிக்கே
கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்
கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி. 23

ஊத்தைச் சடலமென் றெண்ணாதே இதை
உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே
பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே. 24

உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி
அச்சுள்ள விளக்கு வாலையடி அவி
யாம லெரியுது வாலைப்பெண்ணே! 25

எரியு தேஅறு வீட்டினி லேயதில்
எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லை
தெரியுது போக வழியுமில்லை பாதை
சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே. 26

சிலம்பொலி யென்னக் கேட்குமடி மெத்த
சிக்குள்ள பாதை துடுக்கமடி
வலம்புரி யச்சங்கமூது மடி மேலே
வாசியைப் பாரடி வாலைப்பெண்ணே! 27

வாசிப் பழக்க மறியவே ணும்மற்றும்
மண்டல வீடுகள் கட்டவேணும்
நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே! 28

முச்சுடரான விளக்கி னுள்ளே மூல
மண்டல வாசி வழக்கத்திலே
எச்சுடராகி அந்தச் சுடர் வாலை
இவள்விட வேறில்லை வாலைப்பெண்ணே! 29

சூடாமல் வாலை இருக்கிறதும் பரி
சித்த சிவனுக்குள் ளானதனால்
வீடாமல் வாசி பழக்கத்தை பாருநாம்
மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே! 30

மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்
விளக்கில் நின்றவன் வாணியடி
தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி
தாண்டிக் கொண்டான்பட் டாணியடி. 31

அத்தியி லேகரம் பத்தியி லேமனம்
புத்தியி லேநடு மத்தியிலே
நெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன்
நிலைமையைப் பாரடி வாலைப்பெண்ணே! 32

அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும்
வழுத்தி னேன்ஞானப் பழத்திலே
கழுத்தி லேமயேச் வரனு முண்டுகண்
கண்டு பாரடி வாலைப்பெண்ணே! 33

அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம்
கொஞ்சி விளையாடும் வஞ்சியரே
நெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பா னவன்
நேருட னாமடி வாலைப்பெண்ணே! 34

தொந்தியி லேநடு பந்தியிலே திடச்
சிந்தையி லேமுந்தி உன்றனுடன்
உந்தியில் விட்ணுவுந் தாமிருப் பாரிதை
உண்மையாய்ப் பாரடி வாலைப்பெண்ணே! 35

ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்
காலத்தி லேயனு கூலத்திலே
முலத்திலே பிரமன் தானிருந் துவாசி
முடிக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே. 36

தேருமுண் டைஞ்சூறாம் ஆணியுண்டே அதில்
தேவரு முண்டுசங் கீதமுண்டே
ஆருண்டு பாரடி வாலைத்தெய் வம்மதிலே
அடக்கந் தானடி வாலைப்பெண்ணே! 37

ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில்
உள்ளே நிலைக்கார ரஞ்சுபேராம்
அன்புடனே பரிகாரர்கள் ஆறு பேர்
அடக்கந் தானடி வாலைப்பெண்ணே! 38

இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம்
இருக்கையில் புத்திக் கறிக்கையினால்
சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்
சாகிற தேதடி வாலைப்பெண்ணே! 39

நகார திட்டிப்பே ஆனதனால் வீடு
வான வகார நயமாச்சு!
உகார முச்சி சிரசாச்சே இதை
உற்றுப் பாரடி வாலைப்பெண்ணே! 40

வகார மானதே ஓசையாச்சே அந்த
மகார மானது மாய்கையாச்சே
சிகார மானது மாய்கையாச்சே இதைத்
தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே! 41

ஓமென்ற அட்சரந் தானுமுண்டு அதற்குள்
ஊமை யெழுத்து மிருக்குதடி;
நாமிந்தெ ழுத்தை யறிந்துகொண் டோ ம்வினை
நாடிப் பாரடி வாலைப்பெண்ணே! 42

கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை
வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்
எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காயம்
என்றைக் கிருக்குமோ வாலைப்பெண்ணே! 43

இருந்த மார்க்க்கமாய்த் தானிருந்து வாசி
ஏற்காம லேதான டக்கவேணும்
திரிந்தே ஓடிய லைந்துவெந்து தேகம்
இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே! 44

பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்
பூவில்லா பிஞ்சும் அநேகமுண்டு
மூத்த மகனாலே வாழ்வுண்டு மற்ற
மூன்று பேராலே அழிவுமுண்டு! 45

கற்புள்ள மாதர் குலம்வாழ்க நின்ற
கற்பை யளித்தவரே வாழ்க!
சிற்பர னைப் போற்றி கும்மியடி
தற்பரனைப் போற்றி கும்மியடி. 46

அஞ்சி னிலேரெண் டழிந்ததில் லையஞ்
சாறிலேயும் நாலொழிந்த தில்லை
பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது
பேணிப் போடலாம் வாலைப்பெண்ணே! 47

கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட்டா னிரு
காலில்லா நெட்டையன் முட்டிக்கிட்டான்
ஈயில்லாத் தேனெனத் துண்டுவிட் டானது
இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே! 48

மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய்
விளக்கு கன்னனூர்ப் பாதையிலே
காலூரு வம்பலம் விட்டத னாலது
கடுநடை யடி வாலைப்பெண்ணே! 49

தொண்டையுள் முக்கோணக் கோட்டையிலே இதில்
தொத்திக் கொடிமரம் நாட்டையிலே
சண்டை செய்துவந்தே ஓடிப்போனாள் கோட்டை
வெந்து தணலாச்சு வாலைப்பெண்ணே! 50

ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு
அப்போதே வெந்தே அழிந்திட்டதும்
பாச வலைவந்து மூடியதும் ஈசன்
பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே! 51

அன்ன மிருக்குது மண்டபத்தில் விளை
யாடித் திரிந்தே ஆண்புலியும் அங்கே
இன்ன மிருக்குமே யஞ்சு கிளியவை
எட்டிப் பிடிக்குமே மூன்று கிளியடி வாலைப்பெண்ணே. 52

தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது
மாப்பிள்ளை தான்வந்து சாப்பிடவும்
ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தைஇருந்து
விழிப்பது பாருங்கடி வாலைப்பெண்ணே. 53

மீனு மிருக்குது தூரணி யிலிதை
மேய்ந்து திரியுங் கலசாவல்
தேனு மிருக்குது போரையிலே யுண்ணத்
தெவிட்டு தில்லையே வாலைப்பெண்ணே! 54


காக்கை யிருக்குது கொம்பிலே தான்கத
சாவி லிருக்குது தெம்பிலேதான்
பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்
பார்த்தால் தெரியுமே வாலைப்பெண்ணே! 55

கும்பி குளத்திலே யம்பல மாமந்தக்
குளக்க ருவூரில் சேறுமெத்த
தெம்பிலிடைக் காட்டுப் பாதைக ளாய்வந்து
சேர்ந்து ஆராய்ந்துபார் வாலைப்பெண்ணே! 56

பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரெண்டு
கெண்டை யிருந்து பகட்டுதடி
கண்டிருந்து மந்தக் காக்கையுமே அஞ்சி
கழுகு கொன்றது பாருங்கடி! 57

ஆற்றிலே அஞ்சு முதலைய டியரும்
புற்றிலே ரண்டு கரடியடி
கூற்றுனு மூன்று குருடன டிபாசங்
கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே! 58

முட்டை யிடுகு தொருபற வைமுட்டை
மோசம் பண்ணு தொருபறவை
வட்டமிட் டாரூர் கண்ணியி லிரண்டு
மானுந் தவிக்குது வாலைப்பெண்ணே! 59

அட்டமா விண்வட்டப் பொட்டலி லேரண்டு
அம்புலி நிற்குது தேர் மேலே
திட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்
செந்தண லானதே வாலைப்பெண்ணே! 60

முக்கோண வட்டக் கிணற்றுக்குள்ளே மூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை
அமர்ந்தி ருக்கிறாள் வாலைப்பெண்ணே! 61

இரண்டு காலாலொரு கோபுரமாம் நெடு
நாளா யிருந்தேஅமிழ்ந்து போகும்
கண்டபோ துகோபு ரமிருக்கும் வாலை
காணவு மொட்டாள் நிலைக்கவொட்டாள். 62

அஞ்சு பூதத்தை யுண்டுபண்ணிக் கூட்டி
ஆரா தாரத்தை யுண்டுபண்ணிக்
கொஞ்சு பொண்ணாசை யுண்டுபண்ணி வாலை
கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள். 63

காலனைக் காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகா லவிட முண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்த வளாமிந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம். 64

மாதாவாய் வந்தே அமுதந்தந்தாள் மனை
யாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்
ஆதரவாகிய தங்கையானாள் நமக்
காசைக் கொழுந்தியு மாமியானாள். 65

சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை
செங்காட்டுச் செட்டியைத் தானுதைத்தாள்
ஒருத்தி யாகவே சூரர்தமை வென்றாள்
ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள். 66

இப்படி யல்லொ இவள்தொழி லாமிந்த
ஈனா மலடி கொடுஞ்சூலி
மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த
வயசு வாலை திரிசூலி. 67

கத்தி பெரிதோ உறைபெரிதோ விவள்
கண்ணு பெரிதோ முகம் பெரிதோ
சத்தி பெரிதோ சிவன் பெரிதோ நீதான்
சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே! 68

அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல
அப்படி வாலை பெரிதானால்
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல
பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி. 69

மாமிச மானால் எலும்புண்டு சதை
வாங்கிஓடு கழன்று விடும்
ஆமிச மிப்படிச் சத்தியென்றே விளை
யாடிக் கும்மி அடியுங்கடி. 70

பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் விளையாதென்று
கண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாளது
உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே! 71

மண்ணு மில்லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்
வாசமில் லாமலே பூவுமில்லை
பெண்ணு மில்லாமலே ஆணுமில் லையிது
பேணிப் பாரடி வாலைப்பெண்ணே! 72

நந்த வனத்திலே சோதியுண்டு நிலம்
நத்திய பேருக்கு நெல்லுமுண்டு
விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்
விட்ட குறைவேணும் வாலைப்பெண்ணே! 73

வாலையைப் பூசிக்கச் சித்தரானார் வாலைக்
கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத்தா ரிந்த
விதந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே! 74

வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங்
காப்பது சேலைக்கு மேலுமில்லை
பாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக்
கும்மிக் மேலான பாடலில்லை. 75

நாட்டத்தைக் கண்டா லறியலாகு மந்த
நாலாறு வாசல் கடக்கலாகும்
பூட்டைக் கதவைத் திறக்கலா கும்மிது
பொய்யல்ல மெய்யடி வாலைப்பெண்ணே! 76

ஆணும் பெண்ணும்கூடி யானதால் பிள்ளை
ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்
ஆணும் பெண்ணுங்கூடி யானதல்லோ பேதம்
அற்றொரு வித்தாச்சு வாலைப்பெண்ணே! 77

இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே
என்வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே
அன்றைக் கெழுத்தின் படிமுடியும் வாலை
ஆத்தாளைப் போற்றடி வாலைப்பெண்ணே! 78

வீணாசை கொண்டு திரியாதே இது
மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு
காணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி
காணலாம் ஆகாயம் ஆளலாமே. 79

பெண்டாட்டி யாவதும் பொய்யல்லவோ பெற்ற
பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ?
கொண்டாட்ட மானதகப்பன் பொய்யே முலை
கொடுத்த தாயும் நிசமாமோ? 80

தாயும் பெண்டாட்டியும் தான்சரி யேதன்யம்
தாமே இருவருந் தாங்கொடுத்தார்
காயும் பழமுஞ் சரியாமோ உன்றன்
கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே! 81

பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற
பிள்ளை மசானக் கரையின் மட்டும்
தொண்டாட்டுத் தர்மம் நடுவினிலே வந்து
சேர்ந்து பரகதி தான்கொடுக்கும். 82

பாக்கியமும் மகள் போக்கியமும் ராச
போக்கியமும் வந்த தானாக்கால்
சீக்கிரந் தருமஞ் செய்யவேண்டும் கொஞ்சந்
திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும். 83

திருப்பணி களைமுடித் தோரும் செத்துஞ்
சாகாத பேரி லொருவரென்றும்
அருட் பொலிந்திடும் வேதத்தி லேயவை
அறிந்து சொன்னாளே வாலைப்பெண்ணே! 84

மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்
மெல்லிய ரோடு சிரிக்கும்போது
யுத்தகாலன் வந்துதான் பிடித்தால் நாமும்
செத்த சவமடி வாலைப்பெண்ணே! 85

ஏழை பனாதிக னில்லையென்றால் அவர்க்கு
இருத்தால் அன்னங் கொடுக்க வேண்டும்
நாளையென்று சொல்ல லாகாதே என்று
நான்மறை வேத முழங்குதடி. 86

பஞ்சை பனாதி யடியாதே அந்தப்
பாவந் தொலைய முடியாதே
தஞ்சமென்றோரைக் கெடுக்காதே யார்க்கும்
வஞ்சனை செய்ய நினையாதே. 87

கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்
காணாத வுத்தரம் விள்ளாதே
பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற
பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே. 88

சிவன்ற னடியாரை வேதியரை சில
சீர்புல ஞானப் பெரியோரை
மவுன மாகவும் வையாதே அவர்
மனத்தை நோகவும் செய்யாதே. 89

வழக்க ழிவுகள் சொல்லாதே கற்பு
மங்கையர் மேல்மனம் வையாதே
பழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை
பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே! 90
கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்
கொளைக ளவுகள் செய்யாதே
ஆடிய பாம்பை யடியா தேயிது
அறிவு தானடி வாலைப்பெண்ணே! 91

காரிய னாகினும் வீரியம் பேசவும்
காணா தென்றவ்வை சொன்னாளே
பாரினில் வம்புகள் செய்யாதே புளிப்
பழம்போ லுதிர்த்து விழுந்தானே. 92

காசார் கள்பகை செய்யா தேநடுக்
காட்டுப் புலிமுன்னே நில்லாதே
தேசாந்தி ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்
தேவடி யாள்தனம் பண்ணாதே! 93

தன்வீடி ருக்க அசல்வீடு போகாதே
தாயார் தகப்பனை வையாதே
உன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்
ஓடித் திரிகிறாய் வாலைப்பெண்ணே! 94

சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு. 95

பாலோடு முண்டிடு பூனையு முண்டது
மேலாக காணவுங் காண்பதில்லை
மேலந்த ஆசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்
வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள். 96

கோழிக் காறுகாலுண் டென்றுசொன்னேன் கிழக்
கூனிக் மூன்றுகா லென்றுசொன் னேன்
கூனிக்கிரண் டெழுத்தென்று சொன்னேன் முழுப்
பானைக்கு வாயில்லை யென்றுசொன்னேன். 97

ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேன்நம்
பானைக்குப் பானைக்குநிற்கு மேல்சூல்
மாட்டுக்கு காலில்லை யென்றுசொன்னேன் கதை
வகையைச் சொல்லடி வாலைப்பெண்ணே! 98

கோயிலு மாடும் பறித்தவ னுங்களறிக்
கூற்று மேகற் றிருந்தவனும்
வாயில்லாக் குதிரை கண்டவனும் மாட்டு
வகை தெரியுமோ வாலைப்பெண்ணே! 99

இத்தனை சாத்திரஞ் தாம்படித்தோர் செத்தார்
என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்
செத்துப் போய்கூட கலக்கவேண்டும் அவன்
தேவர்க ளுடனே சேரவேண்டும். 100

உற்றது சொன்னாக்கா லற்றது பொருந்தும்
உண்டோ உலகத்தில் அவ்வைசொன்னாள்
அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
அவனே குருவடி வாலைப்பெண்ணே! 101

பூரணம் நிற்கும் நிலையறியான் வெகு
பொய்சொல்வான் கோடி மந்திரஞ்சொல்வான்
காரணகுரு அவனு மல்ல இவன்
காரியகுரு பொருள் பறிப்பான். 102

எல்லா மறிந்தவ ரென்றுசொல்லி இந்தப்
பூமியி லேமுழு ஞானியென்றே
உல்லாச மாக வயிறு பிழைக்கவே
ஓடித் திரிகிறார் வாலைப்பெண்ணே! 103

ஆதிவா லைபெரி தானா லும்மவள்
அக்காள் பெரிதோ? சிவன் பெரிதோ
நாதிவா லைபெரி தானாலும் அவள்
நாயக னல்ல சிவம்பெரிது. 104

ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்
அண்டாது மற்ற வியாதியெல்லாம்
பேயும் பறந்திடும் பில்லிவி னாடியில்
பத்தினி வாலைப்பெண் பேரைச்சொன்னால். 105

நித்திரை தன்னிலும் வீற்றிருப்பா ளெந்த
நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்
சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை
உற்றகா லனையும் தானுதைப்பாள். 106

பல்லாயி ரங்கோடி யண்டமுதல் பதி
னாங்கு புவனமும் மூர்த்திமுதல்
எல்லாந் தானாய்ப் படைத்தவளாம் வாலை
எள்ளுக்கு ளெண்ணைய்போல நின்றவளாம். 107

தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும்மித் தமிழ்
செய்ய எனக்குப தேசஞ்செய்தாள்
நேசவான் வீரப் பெருமாள் குருசாமி
நீள்பதம் போற்றிக்கொண் டாடுங்கடி. 108

ஆறு படைப்புகள் வீடுகடை சூத்ர
அஞ்செழுத் துக்கும் வகையறிந்து
கூறுமுயர் வல வேந்திரன் துரைவள்ளல்
கொற்றவன் வாழக்கொண் டாடுங்கடி. 109

ஆடுங்கள் பெண்டுகள் எல்லோரு மந்த
அன்பான கொங்கணர் சொன்னதமிழ்
பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை
பாதத்தைப் போற்றிக் கொண்டாடுங்கடி. 110

சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி
தேவர்கள் வாழி, ரிஷிவாழி,
பத்தர்கள் வாழி, பதம்வா ழிகுரு
பாரதி வாலைப்பெண் வாழியவே! 111

சிவன் அனுமன் ஸ்ரீராமசந்திரமூர்த்திசிவன் அனுமன் ஸ்ரீராமசந்திரமூர்த்திமிக அற்புதமான ஒரு படம். இதை உங்களின் பூஜை அறையில் வைத்து நாள்தோறும் பூஜித்துவந்தால் உங்கலுக்கு சகல பாக்கியங்களும் கிடைக்கும் இறைவனின் ஆசியும் கிடைக்கும்.
ஸ்ரீராமர் மற்றும் சிவனின் கடாச்சம்.. என்ன ஒரு அதிஅற்புதமான அழகு. சில நேரஙக்ளில் எனக்கு இந்த படத்தை விட்டு என் கண்கள் அகல மறுக்கும்.

Friday, 29 October 2010

ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-6


தமிழ் நாட்டில் உள்ள செவ்வாய் கிரக தலம்போல் உஜ்ஜயினியில் உள்ள மங்கள்னாத் சிவனின் அன்னாபிசேக அலங்காரம் தரிசனம்
.


நாகராகஜரின் விஷ்வரூப தரிசனம். இப்படி ஒரு கரு நாக ராஜாவை முதன்முறையாக உஜ்ஜயினி நதிக்க்ரையில்தான் பார்த்தேன். நீங்களும் பாருங்கள்
உஜ்ஜயினி நதிக்கரையில் அருள்பாலிக்கும் பிரம்மா

அருகிலேயே அருள் பாலிக்கும் வினாயகர்

நாக சர்ப்பதோசங்கள் நிவர்த்தி செய்யும் ஆற்றுக்கரையில் அமர்ந்திருக்கும் ஐந்து சிவலிங்கங்கள்.


புதுவிதமான சிவனின் அலங்கார தோரணம்


Thursday, 28 October 2010

ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-5

உஜ்ஜயினி மகாளி அம்மனின் ஆலய்த்தில் உள்ள பல கைகள் பல கால்கள் உள்ள உக்கிர காளியின் உக்கிர தோற்றம்.

நாமெல்லாரும் சிவனை காலால் மிதிக்கும் உக்கிர காளியை பார்த்திருக்கிறோம் ஆனால் சிவன் காளியை தூக்கி செல்லும் இந்த படம் கொஞ்சம் புதியதாகவே உள்ளது. இதனுடைய கதையோ அல்லது புராணமோ யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.பூமிக்கடியில் இருக்கும் சிவாலயத்தில் உள்ள சிவலிங்கம் இதுவும் உஜ்ஜயினில்தான் உள்ளது,
ஸ்ரீ மகா காளபைரவர்


சதாசிவனான அந்த சிவனின் மாறுப்பட்ட தரிசனம்
மேலே உள்ள சிவனின் ஆலயம் இது.இதுவும் உஜ்ஜயினியில் ஒரு இடத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த துர்க்கையின் அலங்காரம்பூமிக்கடியில் இருக்கும் ஒரு ஆலயத்தில் உள்ள அம்மன், பெயர் இந்தியில் உள்ளது. எனக்கு இந்தி படிக்கத்தெரியாதுஇது அந்த குகைக்கோயிலுக்கு வெளிமதிர்சுவரில் உள்ள பகவான். அனேகமாக வாஸ்து பகவானோ என்பது என் சந்தேகம். அவர்தான் இந்த மாதிரி அமர்ந்திருப்பதால் சொல்கீறேன்.

Wednesday, 27 October 2010

ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-4

உஜ்ஜயினியில் உள்ள ஹரிசித்தி வினாயகரின் தரிசனம் . இதில் வினாயகரின் மூன்று முகம் உள்ளதை அனைவரும் கவனித்து தரிசியுங்கள்இதுதான் அந்த ஆலயத்தின் எழில்மிகு தோற்றம்இந்த ஆலயத்தில் உள்ள ஜகன் நாதரின் எழில்மிகு அலங்காரத்தோற்றம்


உஜ்ஜயினி மகா காளேஸ்வரரின் ஆலய்த்தின் அருகில் உள்ள மகா கணபதியின் எழில்மிகு தரிசனம்.


இந்தூரில் உள்ள பேருந்து நிலையத்தில் உள்ள துர்கா தேவியின் நவராத்திர் அலங்காரம். நான் ஓம்காரேஸ்வரர் சென்று வரும்போது எடுத்த படம் உங்களுக்காகஅங்கே உள்ள ஒரு சிவாலயத்தின் எழில்முகு தோற்றம்
உஜ்ஜயினியில் உள்ள ஹரிசித்தி மாதா மகாளி விக்கிரமாதித்தனுக்கு அருளிய மகா தேவி.உஜ்ஜயினியில் மகாகாளேஸ்வரரின் ஆலயத்தின் அருகில் நவராத்திரியை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட மகா துர்கையின் எழில்மிகு தரிசனத்தை கண்டு மெய்சிலிர்த்தேன். இதோ
இதுவும் உஜ்ஜயினி மகா காளேஸ்வரரின் ஆலயத்தின் அருகில் உள்ள ஒரு சிவாலயத்தின் முதலில் இந்த தோரண அலங்காரம். அந்த ஆலயத்தில் இராமேஸ்வரர் அருள்கிறார்.