Monday 27 June 2011

பட்டினத்தாரின் ஜீவ சமாதி உள்ள இடம்

பட்டினத்தாரின் ஜீவ சமாதி உள்ள இடம்



திருவொற்றியூர் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆதிபுரிஸ்வரர் உடனுறை வடிவுடை அம்மன் ஆலயத்தை முதலில் தரிசனம் செய்யுங்கள். அந்த கோயிலுக்கு தியாகராஜா ஆலயம் என்று கூறுகின்றனர். அந்த அலாயத்தில் இருந்து சுமார் பத்து நிமிடம் நடை பயணமாக சென்று பட்டினத்தாரின் ஜீவ சமாதியை அடையலாம். அங்கே யாரிடமும் கேட்டு தெரிந்துகொள்ளலாம். படினத்தார் சமாதி என்று கேட்டால் தான் சரியான வழியை சொல்கிறார்கள். சித்தர் சமாதி என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆகவே பட்டனத்தாரின் ஜீவ சமாதி உள்ள இடம் என்று கேட்டால் அவரின் சிவ சமாதியை எளிதில் அடையலாம். அங்கிருந்து ஆட்டோக்களும் செல்கிறது. ஆட்டோவில் சென்றால் ஐந்து நிமிடம் ஆகும்.

உண்மையிலேயே அவரின் ஜீவ சமாதி உள்ள இடத்தில் அவரின் ஜீவன் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது. அவரின் ஜீவ சமாதி தரிசனம் உண்மையிலேயே நிதர்சனம்

காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே

அடுத்து இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி
சிவனருள் பதிவன்

Monday 6 June 2011

அட்சய திரிதியை அன்று தங்கம் தான் வாங்க வேண்டுமா?

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று மக்கள் சொல்லலாம். ஆனால், இறை அடியார்களாகிய நீங்கள் என்ன சொல்கிறீர்கள். ஆதியில் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த அற்புதமான வேத வாக்கியங்கள், பழமொழிகள் எல்லாம் தற்காலத்தில் அனர்த்தம் ஆகி விட்டதற்கு அட்சய திரிதியையும் ஒன்று.

அட்சய திரிதியை என்றால் என்ன?

ஆதிகாலத்தில் பிரம்ம தேவருக்கு ஐந்து தலைகள் இருந்தன. ஒரு முறை பிரம்ம மூர்த்தி தானே படைப்புக் கடவுள், தன்னை மிஞ்சிய தெய்வம் உலகில் எவரும் இல்லை என்று செருக்குக் கொண்டபோது சிவபெருமாள் பிரமனுடைய ஐந்தாவது தலையைக் கிள்ளி பிரம்மனுடைய அகங்காரத்தைச் சம்ஹாரம் செய்தார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தின் விளைவாக பிரம்மாவினுடைய கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது. இந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறுவதற்காக பிரபஞ்சம் எங்கும் அலைந்து திரிந்து பிட்சை ஏற்று, இறுதியில் காசி அன்னபூரணி தேவியிடம் பிச்சை ஏற்றபோது சிவபெருமானுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கி பிரம்ம கபாலம் அவர் கையிலிருந்து மறைந்தது. அன்னை பராசக்தியிடம் சிவபெருமாள் பிச்சை ஏற்ற தினமே அட்சய திரிதியை ஆகும்.

சிவபெருமானே அன்னபூரணி தேவியிடம் பிச்சை ஏற்கிறார் என்றால் அட்சய திரிதியை அன்று நாம் செய்ய வேண்டியது அன்னதானம் என்பது ஒரு சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளும் அல்லவா? ஆறறிவு பெற்ற மக்கள் இந்தச் சிறு விஷயத்தைக் கூட எப்படித் தலைகீழாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பது வியப்புக்குரியதே. திதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு. இதில் திரிதியை திதி எதையும் பெருக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. எது பெருக வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நன்றி சில இணையதளம் தொகுப்பு.