Monday 31 January 2011

கலியுகம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கும்?

இம்மண்ணுலகின் முதல் நிலமான குமரிக் கண்டத்தில்தான் எல்லாப் பயிரினங்களும், உயிரினங்களும் காலப்போக்கில் தோன்றின. இத்தோற்றங்களில் முழுவளர்ச்சி ஏற்பட்டு இம்மண்ணின் ஈசர்களான (ஈசன் = தலைவன்) 'மணீசர்கள்' தோன்றிய பிறகே; அனைத்து வகையான வாழ்வியல்களுக்கும் நெறிமுறை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.




அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்கள் அடிக்கடி இம்மண்ணுலகுக்கு வந்து சென்றிட்டார்கள். அவர்கள், விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மணீசர்களைப் பண்பட்ட மனதை உடைய மனிதர்களாக மாற்றிடும் பணியில் ஈடுபட்டார்கள். அதன் பயனாகத் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நால்வகை வாழ்வியல்களை நெறிமுறைப் படுத்தும் 'சமூக விஞ்ஞானமாக'ப் பதினெண் சித்தர்களுடைய 'இந்துமதம்' இம்மண்ணுலகுக்கு அருட்கொடையாக வழங்கப்பட்டது.




இந்த 'இந்துமதம்' குமரிக் கண்டத்தின் தென் இமயமலையின் தென்கங்கை, தென்பிறம்மபுத்திரா, தென் இந்து, தென்யமுனை, பஃறுளி, குமரி, ... முதலிய வற்றாத பேராறுகள் வளப்படுத்திய நிலப்பகுதிகளில் செழிப்பாக முளைத்துக் கிளைத்து வளர்ந்தது. இப்படி, இந்த இந்துமதம் மிகப்பெரிய நிலப்பரப்பில் தன் போக்கில் வளர்ந்த காலம் 'அனாதிக்காலம்' எனக் குறிக்கப் படுகிறது. இந்த அனாதி காலத்தைப் பதினெண் சித்தர்கள் (4,85,920) நான்கு இலட்சத்து எண்பத்தையாயிரத்துத் தொள்ளாயிரத்து இருபது ஆண்டுகள் என்று குறிக்கிறார்கள்.




அனாதிக் காலத்தின் இறுதியில், இந்துமதத்துக்கென அரசாங்கத்தையும், இந்துமதத்துக்குரிய ஆட்சிமொழியான பதினெண் சித்தர்களின் தாய்மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியின் வளவளர்ச்சிக்கெனத் தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கும் திட்டம் செய்யப்பட்டது. அதன் பயனாகப் ப·றுளியாற்றங்கரையில் தொன்மதுரை உருவாயிற்று. அங்கு, பதினெண் சித்தர்க்ளின் தலைவரான 'சிவபெருமான்' தமிழின, மொழி, மதக் காப்பு அரசாக உருவாக்கப்பட்ட பாண்டிய அரசின் முதல் மன்னனாக முடிசூடினார். அவரே, தமிழ்ச் சங்கத்துக்கும் தலைவரானார்.




இச்சிவபெருமான், "பிறவாயாக்கைப் பெரியோன்" என்ற நிலைபெற்றவர். அதாவது, இவர், இம்மண்ணுலகில் மானுடர்க்காக எத்தனை முறை தோன்றினாலும்; மானுடக் கருவில் மீண்டும் பிறக்க மாட்டார். இவர், அறுபத்து நான்கு முறை திருவிளையாடல் நிகழ்த்தியபோதும், ஒருமுறை கூடப் பிறக்கவில்லை. எனவே, 'கருவூறார்' என்ற சொல்லால், அதாவது கருவில் ஊறமாட்டார் (மீண்டும் பிறக்க மாட்டார்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிட்டார். ஆனால், இந்துமதத்தில் மாயோன், நெடியோன், திருமால், பெருமால் என்று குறிக்கப்படும் காத்தற் கடவுள் பத்து முறை திருத்தோற்றம் (பிறப்பெடுத்தல் = அவதாரம்) செய்பவராக உள்ளார். இவர், 'கரு'வைத் தமது ஊராகக் கொண்டிட்டார். எனவே, இவர் 'கருவூரார்' என்றழைக்கப்படும் மரபைப் பெற்றிட்டார்.




சிவபெருமான் 'பிறவாயாக்கைப் பெரியோன்' என்பதால், அவர் 'ஞானாச்சாரியாராக', 'குவலய குருபீடமாக', இந்துமதத் தந்தையாக', 'தத்துவ நாயகமாக', 'அருளாட்சி நாயகமாக',... தமிழ் மொழியின் மெய்ஞ்ஞான சபைத் தலைவராகச் செயல்பட்டுப் பதினெண் சித்தர் பீடத்தைத் தோற்றுவித்தார். அப்பீடத்தில் தொடர்ந்து காலப் போக்கில் (48) நாற்பத்தெட்டுப் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றிய பிறகே, இம்மண்ணுலகு தனது நிறைவை எய்திடும் என்ற அருளுலக ஏற்பாட்டையும் செய்திட்டார். ஏனெனில், இம்மண்ணுலகும், இதனுடைய பயிரினங்களும், உயிரினங்களும், ஒன்பது கோள்கள் + பன்னிரண்டு இராசிகள் + இருபத்தேழு விண்மீன்கள் = (9 + 12 + 27 = 48) என்ற நாற்பத்தெட்டு ஆற்றல்களாலேயே இயக்கப் படுகின்றன.




சிவபெருமான் பாண்டிய அரசின் மன்னனாக முடிசூடிப் பதினெண் சித்தர்களுடைய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தை அரசாங்கத்தின் சட்டப் பூர்வமான மதமாக அறிவித்த நாள் முதல், 'இந்து மத ஆண்டு' என்ற காலக் கணக்கீடு தோற்றுவிக்கப்பட்டுப் பதினெண் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகைச் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகை வழிபடு நிலையினர்களாலும் தொடர்ந்து கணக்கிடப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த மூன்று உகங்களின் (யுகங்களின்) கணக்கும், இந்த நான்காவது உகம் எவ்வளவு காலம் இருந்திடப் போகிறது என்ற கணக்கும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.




1. கீரன் உகம் (கிரேதாயுகம்) 17,28,080 ஆண்டுகள்

2. தீரன் உகம் (திரேதாயுகம்) 12,96,000 ஆண்டுகள்

3. தூரன் உகம் (துவாபரயுகம்) 8,64,000 ஆண்டுகள்

4. கலியன் உகம் (கலியுகம்) 4,32,000 ஆண்டுகள்




(இந்த 1982இல் கலியன் உகம் 5,093 ஆண்டுகள் ஆகியுள்ளன. எனவே,

4,32,000 - 5,093 = 4,26,907 ஆண்டுகள் இன்னும் இக்கலியுகம் நீடித்திடும்.)


இப்படி மிகத் தெளிவாக இம்மண்ணுலகின் பயிரின உயிரின வாழ்வியல் ஆண்டுக் கணக்கு இந்து மதத்தில் இருக்கிறது.


நன்றி நன்றி நன்றி
சந்நிதானம் மதுரை.

உண்மைகள் பலபல அவற்றுள் சில ஆன்மிக துகள்கள்

1.மனிதர்களுக்கு முற்பிறவிகள், மறுபிறவிகள் உண்டு.

2.பிறவாமை, இறவாமை, காயகல்ப சித்திகள் பெற முடியும்

3.ஆவி, ஆன்மா, உயிர் என்ற மூன்று உண்டு.

4.(பசு) உயிர், (பதி) இறை, (பாசம்) தளை என்ற மூன்றே இந்து மதத்தின் அடிப்படை.

5.இம்மண்ணுலகின் இயக்கமும், இம்மண்ணுலகப் பயிரின உயிரின வாழ்வியல்களும் விண்ணிலுள்ள நாள்கள், கோள்கள், இராசிகள், மீன்கள் ... முதலியவற்றின் இயக்கப்படிதான் நிகழுகின்றன.

6.சூரியனிலிருந்து உடைந்து பிரிந்து வந்த நெருப்புக் கோளம்தான் படிப்படியாகப் பனிக்கோளமாக, நீர்க்கோளமாக இருந்து... கல்லும் மண்ணும் தோன்றிப் பின்னர் பயிரினங்களும் உயிரினங்களும் தோன்றி இன்றைய உலகாயிற்று.

7.உடல் தோன்றுவதற்கு முன்னரே உயிர்கள் தோன்றி உலவி வாழுகின்றன (அருவங்கள்). இவையே கருவறை புகுந்து உருவங்களாகின்றன. இதுவே அருவ நிலைகள், உருவ நிலைகள், அருவுருவ நிலைகள் எனப்படுகின்றன.

8.ஆணும், பெண்ணும் சமமே. ஆணை விடப் பெண் அருட்சத்தி பெறும் ஆற்றலையும், தரத்தையும், தீரத்தையும் மிகுதியாகவே பெற்றிருக்கிறாள். பெண்ணையே சத்தியாக வழிபடுவது தான் தந்தர, தாந்தர, தாந்தரீக, தந்திற, தாந்திறப் பூசை முறைகள். சத்தியே அனைத்துக்கும் மூலமானவள், மேலானவள், தலைமையானவள்.

9.பெண் திங்கள் தோறும் மலரும் மலர். அவளைத் தீட்டு என்றோ! விதவை என்றோ! விலக்கி வைப்பது விவேகமற்ற செயல்; தெய்வ விரோதச் செயல்.

10.இம்மண்ணுலகும், பயிரினங்களும், உயிரினங்களும் இயற்கையே. இவற்றின் வடிவிலும், வாழ்விலும் இறைமை அணுக்கள் ஊற்றெடுக்கின்றன. அவற்றைக் குருவழி அறிந்து செயல்படுபவர் திருநிலைகளைப் பெறலாம்.

11.வாழ்ந்த மனிதர்களே இறை, கடவுள், தெய்வம், ஆண்டவர், பட்டவர், தேவர், தேவியர், அமரர், வானவர், ... இருடி, முனிவர், கணபாடி என்று நாற்பத்தெட்டுத் திருநிலைகளைப் பெறுகின்றனர்.

12.ஒரே கடவுள் என்ற கருத்துத் தவறானது. உலகில் தோன்றும் அருளாளர் எல்லோருமே அவரவர் அநுபவத்துக்கேற்ப ஒரு கடவுளைப் பற்றிய உண்மையைக் கூறிச் சென்றுள்ளனர் என்பதால் கடவுள்கள் பலர் உண்டு என்ற பேருண்மை விளங்குகிறது.

13.எல்லா வழிபாட்டு நிலையங்களும், வழிபாட்டு முறைகளும், மறைகளும், நெறிகளும், வேதங்களும், நாதங்களும், போதங்களும், ஓதங்களும், சித்தங்களும், தவங்களும் ... மனிதரைத் தூய்மைப் படுத்தி உய்வு பெறச் செய்வனவே. அதனால் உலக ஆன்ம நேய ஒருமைப் பாட்டுக்கு உலகை அழைத்துச் செல்லுவது அனைத்துக்கும் மூலமான, முதலான, தாயான சித்தர் நெறியெனும் இந்து மதமே.

14.அனைவரும் எல்லா உரிமைகளையும் பெற்றுப் பெருமையோடு பண்பாடும், நாகரீகமும் பேணி வாழும் வாழ்வைப் பதினெண்சித்தர்கள் படைத்த இந்து மதமே செயலாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றது.

15.மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதோ, சுரண்டுவதோ, ஏமாற்றுவதோ தவறு! தவறு!! தவறு!!!

16.மொழி, இனம், நாடு, மதம், சாதி ... என்பவை மானுட அமைதியையோ! நிறைவையோ! நிம்மதியையோ! ஒற்றுமையையோ! மகிழ்ச்சியையோ! பாதுகாப்பையோ! நலிவடையச் செய்துவிடக் கூடாது! கூடாது! கூடாது! கூடவே கூடாது!

17.சமத்துவச் சகோதரத்தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் அமைக்கப் பாடுபடுவதே பதினெண் சித்தர்களின் தத்துவ நோக்கமாகும்.

18.மனித வாழ்வுக்குரிய அன்பு, பாசம், பற்று, கனிவு, காதல், இனிமை, உறவு, (குடும்ப வாழ்வு) இல்லறம், கடமை, வீரம், நன்றி, கட்டுப்பாடு, ஒற்றுமை, நட்பு, சமாதானம் ... முதலிய மென்மைப் பண்புகளின் விதைப்பண்ணையே பதினெண் சித்தர்கள் படைத்த இந்து மதம். அதனால் தான் ‘இந்து மறுமலர்ச்சி பெற்ற போதுதான் பிற்காலச் சோழப் பேரரசு (785-1279) அருளாட்சி நிகழ்த்தப் பிறந்தது’ என்ற இப்பேருண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.


நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றி!!!! நன்றி!!!!!

குருமகா சன்னிதானம்

Friday 28 January 2011

நீங்கள் இப்படி நினைத்ததுண்டா?

உண்மையான ஒருவனுக்கு, கடவுள் தேடலும் குடும்ப பாரமும் இடையறாது தொந்தரவு கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.

கடவுளை நோக்கி நகரும் போது குடும்பம் இழுக்கும்.

குடும்பத்தையே சுற்றி வரும்போது கடவுள் நினைப்பு இழுக்கும்.

நல்ல மனிதனின் இடையறாத போராட்டம் இது.

சரியான உறக்கத்தை கொடுக்காது, திடுக்கிட்டு எழ வைக்கும். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது இது தான்!

இந்த இரண்டுக்குமான வேதனையில் நீங்கள் தவித்திருகிறிர்களா?

பிரியமான மனைவி, பிரியமான குழந்தைகள், நல்ல மாமனார் வீடு, சுகமான தாய்-தந்தை, ஆயினும் கடவுள் என்பது வேறு இடத்தில், வேறு எங்கோ இருப்பதாக நீங்கள் நினைத்திருகிறிர்களா?






கடவுளைத் தேடுபவர் வெளியே அலைய அலையத்தான் உள்ளுக்குள் போகமுடியும். வெளியே கடவுள் இல்லை, உள்ளே தன் உள்ளத்தில் இருக்கிறார் என்பதை, அலைந்துதான் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த கருத்தை நீங்கள் ஏற்றுகொல்கிறிர்களா?

Friday 14 January 2011

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்



இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்க என் இறைவனை வணங்கி பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.

Monday 10 January 2011

புதுப்பொலிவுடன் அருள் பாளிக்கும் தெய்வங்கள்.

புதுப்பொலிவுடன் அருள் பாளிக்கும் தெய்வங்கள்.

ஸ்ரீமரகதாம்பிகை உடனுறை ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர் ஆலயம் பொலிவுப்பெற்று கும்பாபிசேகம் கண்டு புதுப்பொலிவுடன் அருள்பாலிக்கும் தெய்வங்கள்.









Sunday 9 January 2011

மகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-4

கார்த்திகை மாதத்தில் கடைசி ஞாயிறு அன்று இரவு சிம்ம குள தீர்த்தத்தில் குளித்துவிட்டு கோயிலின் தாழ்வாரத்தில் படுத்து சிவனை மனதில் நினைத்து வேண்டுவார்கள். அப்போது இறைவன் இவர்களில் கனவில் வந்து குறை நிவர்த்தி செய்யும் வரையில் அப்படியே படுத்து இருப்பார்கள். அப்படி ஒரு விசேசம் இந்த மார்க்கபந்திஸ்வரர் ஆலயத்தில்.
அதற்காகத்தான் இவ்வளும் பெண்கலும் காத்திருக்கிறார்கள். இது ஒரு பகுதி போட்டோதான். சரியாக இரவு 12 மணிக்கு வருடத்திற்கு ஒரு முறைதான் இந்த தீர்த்தத்தை திறப்பார்கள்.

இந்த சிம்மகுளத்தில் ஆதி சங்கரர் ஸ்தாபித்த யந்திரம் இருப்பதாக ஸ்தல வரலாறு கூறுகிறது








Wednesday 5 January 2011

மகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-3

சிவபெருமான்
ஸ்ரீ மார்க்க பந்திஸ்வரர் வித்தியாசமாக அருள்பாலிக்கிறார். விசேசமாக கும்பாபிசேகத்திற்க்காக மட்டுமே அலங்கரிக்கப்பட்ட சிவன்.



மாவட்ட கலெக்டர் வேலூர் தங்க கோயில் நிர்வாகி நாராயணி ஆலய ஸ்தாபகர் சக்தி அம்மா மற்றும் இரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் இடமிருந்து வலமாக

Sunday 2 January 2011

மகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-1

இந்த ஆலயம் வேலூர் மாவட்டத்தில் வேலுருக்கு அருகில் 15கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திருவிரிஞ்சிபுரம் எனும் நகரத்தில் அருள் பாலிக்கிறார் மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர். இந்த ஆலயம் சுமார் 1300 வருடங்கள் பழமையானது. வேலூருக்கு வந்தால் அல்லது ஸ்ரீ நாராயணி தங்க கோயிலை தரிசிக்க வந்தால் இந்த ஆலயத்தையும் தரிசித்து செல்லுங்கள்.

இந்த ஆலயத்தைப்பற்றிய மேலும் விபரங்கலை இந்த வலைதலத்தை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள்

http://shanthiraju.wordpress.com/2008/06/09/virinchipuram/

நன்றி ராஜு`ஸ் ஓர்டு பிரஸ் தளம்.

கும்பாபிசேகம் நடந்தேறிய நாள்

12-12-2010.

ராஜ கோபுரம்





புது பொலிவுடன் தோற்றமளிக்கும் சிம்மகுளம். இதைப்பற்றிய மேலும் விவரங்களை விரைவில் தருகிறேன்



1008 சிவலிங்கள் ஒன்றாக காட்சி அளிக்கும் 1008லிங்கம்