Sunday, 4 May 2014

ஏன் மனிதர்கலுக்காக சம்ராயதத்தை மாற்றுகிறார்கள்??

ஏன் மனிதர்கலுக்காக சம்ராயதத்தை மாற்றுகிறாகள்??

 நான் முதல் முறை உஜ்ஜையினி மகா காளேஸ்வரரை தரிசிக்க பல தடங்கள்கல் வந்தாலும் முயற்சித்து தரிசித்துவிட்டேன். அன்று முதல் இன்று வரை நினைத்த போது அவரை தரிசனம் செய்துகொண்டு வருகிறேன்.
 ஆனால் இப்போது என்னுடைய வருத்தம் என்னவென்றால்....உஜ்ஜையினி மா நகரத்தில் காள பைரவருக்கு ஊட்டப்படும் மது வகைகள் கோயிலின் முகப்பில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏதோ நான் குடிகாரன் அதனால் ஆந்தங்கபடுகிறேன் என்று என்ன வேண்டாம். ஏனோ மனம்  வருந்தியது கடைசியாக நேற்று தரிசித்த போது.

ஏனடா உங்களுக்காக என்னை மாற்றுகிறீர்கள் என்று கேட்டது போல்  இருந்தது காள பைரவரின் தரிசனம்.

ஐயா மனிதனுக்காக சட்டத்தை மாற்றலாம் ஆனால் தெய்வத்திற்காக??

இருந்தாலும் அங்கு மறைத்து வைத்து விற்கீறார்கள்.....
 மனதில் பட்டதை எழுதினேன்.

இதோ உங்கலுக்காக உஜ்ஜையினி மகா காளபைரவரின் தரிசனம்

அப்படியே உஜ்ஜையினி மாகா காளியின் தரிசனமும்

அன்புடன்
சிவனருள் பதிவன்


Tuesday, 22 April 2014

பள்ளி கொண்ட பரமேஸ்வரன்


பரந்தாமனான மகாவிஷ்ணுவைத்தான் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் தரிசிக்க முடியும். ஆனால், சுருட்டப்பள்ளிக்குச் சென்றால் பரமேஸ்வரனும் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலத்தை தரிசிக்கலாம்.

தமிழக – ஆந்திரா எல்லை பகுதியில் ஊத்துக்கோட்டை அருகே இந்த சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் `பள்ளி கொண்டீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இங்கு சிவபெருமான், உமாதேவியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கும் திருக்கோலத்தை காணும்போது நம்மை அறியாமலேயே பக்தி பரவசத்தில் திளைக்கிறோம். பள்ளி கொண்டுள்ள இறைவனுக்கு அருகில் மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், பிருகு முனிவர், பிரம்மா ஆகியோர் வணங்கி நிற்கிறார்கள்.    அவர்களுக்கு அருகில் சூரிய, சந்திரர்கள், குபேரன், சப்த ரிஷிகள் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள், கின்னரர், கிம்புருடர் போன்றோரும் சிவனை வணங்கி பிரார்த்தனை செய்கிறார்கள்.


கோவில் தல வரலாறு
தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தபோது அமுதம் வருவதற்கு முன் ஆலகால விஷம் வந்தது. அனைவரும் அஞ்சி ஓடியபோது மகாவிஷ்ணு அருகில் சென்றார். விஷ நெடி தாக்கியதில் அவரது மேனி நீல நிறமானது. இதுபற்றி அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டார்கள்.
அதன்தொடர்ச்சியாக சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தினார். பக்கத்தில் இருந்த பார்வதிதேவி, பதறிப் போனாள். தன் கணவனின் கழுத்தை இறுக்கி பிடித்தாள். இதனால் ஆலகால விஷம் அவரது கழுத்தைத் தாண்டாமல் கண்டமாகிய கழுத்தில் நீல நிறத்தில் நின்று விட்டது. சிவனும் `திருநீலகண்டன்’ ஆனார்.


இதன்பிறகு, சிவபெருமானும் அன்னை பார்வதிதேவியும் கைலாயம் நோக்கி புறப்பட்டார்கள். செல்லும் வழியில் சோலைகள் நிறைந்த இன்றைய சுருட்டப்பள்ளியில் இருவரும் தங்கினார்கள். விஷ மயக்கம் தீராமல் இருக்கவே… சிவபெருமான், உமாதேவியின் மடியில் தலை வைத்து சிறிது நேரம் கண் அயர்ந்தார்.


பரமன் பள்ளி கொண்டது தெரிய வந்ததும் இந்த அதிசயத்தைப் பார்த்து வணங்கத் தேவர்கள் அனைவரும் சுருட்டப்பள்ளிக்கு விரைந்து வந்து விட்டார்கள். அவர்களிடம் நந்தி பகவான், மயக்கம் தெளிந்தபின் பரமேஸ்வரனை வழிபடலாம் என்று அறிவுறுத்தினார்.தன்னை நாடி வந்தோருக்காக சிவபெருமான் இந்த மாலைக் காலத்தில்-சந்தியா நேரத்தில் எழுந்தருளினார். ஆனந்த நடனம் ஆடினார். தேவர்கள் அவரை தரிசித்து மகிழ்ந்தார்கள் என்கிறது இக்கோவில் தல வரலாறு. பள்ளி கொண்டுள்ள சுருட்டப்பள்ளி இறைவனை தேடி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்கிறார்கள்.

விஜய நகரத்து மன்னர் ஹரிஹர புக்கரால் பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு இத்திருக்கோயில் கட்டப்பட்டதால் சைவத்திருமறையில் இடம்பெறவில்லை.


வால்மீகேஸ்வரர்(வால்மீகி பூஜித்த லிங்கம்) ராமலிங்கேஸ்வரர் (ராமர் பூஜித்த லிங்கம்) லிங்கோத்பவர்( லிங்கதில் சிவன் நிற்கிறார்) ,கௌரி ஸ்மேத தக்சிணாமூர்த்தி மற்றும் சப்த மாதாக்களும் இத்திருக்கோயிலின் சிறப்பு. இத்திருக்கோயிலில் பள்ளிக்கொண்டீஸ்வரர் சர்வமங்கள (பார்வதி) மடியில் சயனத்தில் காட்சியளிக்கிறார்.இதே போல் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை பார்க்கலாம்.சிவனை இங்கே (சுருட்டப்பள்ளி) மட்டும் தான் காண முடியும்.

அன்புடன்
சிவனருள் பதிவன்


காசியில் கார்த்திகேயன் ஆலயம் (முருகன் கோயில்) ???

காசியில் கார்த்திகேயன் ஆலயம் (முருகன் கோயில்)

 நண்பர்களே நான் காசிக்கு இதுவரை இரண்டு முறை போயுள்ளேன். ஆனால் கார்த்திகேயன் ஆலயத்தை தரிசிக்க முடியவில்லை. அங்குள்ள மக்களுக்கு அந்த ஆலயத்தைப்பற்றி அவ்வளவாக தெரியவில்லை.

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

அடுத்தமுறை போகும்போது தரிசிக்க உதவியாக இருக்கும்

அன்புடன்
சிவனருள் பதிவன்

Wednesday, 19 March 2014

சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்

சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் விதியை மதியால் வெல்லலாம். ஆம் மதி என்பது இங்கே முதலில் சந்திரனையும் பின்பு அதே சொல் நமது அறிவையும் குறிக்கிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மதி என்கிற சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் அவர் தம் அறிவின் துணை கொண்டு விதியை வெல்லுவார் என்பது திண்ணம். சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருப்பது என்பது நல்ல நிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஷட்பல நிர்ணயம் என்றொரு கணக்கீடு இருக்கிறது. அதன் படி சந்திரனின் பலம் நன்றாக இருந்தால் அவர் விதியை மதியால் வெல்லுவார்.மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது. பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே. நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை. இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி). இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர். பைரவர் என்றால் எந்த பைரவர் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. இந்த இரண்டு சிவ வடிவங்கள் மொத்தம் உள்ள 64சிவ வடிவங்களிலும், வழிபாட்டிற்குரிய 25 சிவ வடிவங்களிலும் மிக மிக முக்கியமானவை. தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள் வழங்கும் வடிவங்கள் ஆகும்.தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் சென்னியில் பிறையை சூடியவர்கள். இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை நாம் காணலாம்.


தட்சணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம். ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர். சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பானவர். தென் திசையை நோக்குபவர். இவரை வழிபடுவது மிகவும் எளிது. இவரை வழிபட கடினமான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும். நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும். மந்திர செபம் செய்பவர்களுக்கு உகந்த கடவுள் இவரே. இவரை வழிபட மனம் அமைதி பெறும். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். மந்திர செபம் செய்பவர்களின் மந்திர செபங்களுக்கு சக்தியை தருபவரும் இவரே. மனநிம்மதியை தருபவரும் இவரே.“ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”
கடைசியாக வருபவர் கர்மவினைகளை தன் பார்வையாலே எரிக்கும் வல்லமை கொண்ட பைரவர் ஆவார். இவரே சிவத்தலத்தில் இறுதி சிவ வடிவம் ஆவார். பைரவர்களுள் சொர்ணபைரவரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர். மற்ற அனைத்து பைரவ வடிவங்கள் கோவிலிலோ அல்லது காடுகளிலோ அல்லது மலைகளிலோ வைத்து வழிபடத்தக்கன. பைரவ வடிவம் சிவ வழிபாட்டில் ஏற்படும் கர்மவினை பாதிப்புகளை நீக்க வல்ல வடிவம் ஆகும்.


பைரவரை தொடர்ந்து வழிபடுவதால் மட்டுமே நாம் செய்யும் சிவ வழிபாட்டின் பலனை அடையமுடியும்.பைரவரே நவக்கோள்களின் அதிபதி ஆவார். சிவ வழிபாட்டின் பலனை நமக்கு தருமாறு நவக்கோள்களுக்கு ஆணையிடும் தலைவரும் பைரவரே ஆவார். இவரை வழிபடாமல் இருந்தால் நமக்கு சிவ வழிபாட்டின் பலன் கிடைக்காது.பைரவரே காலத்தையும், காலனையும் வென்றவர். காலகாலர் என்ற பெயரை கொண்டவரும் பைரவரே ஆவார். தெற்கு திசை நோக்கும் பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.


பைரவர் சிவபெருமானின் கோபமே உருவான ருத்ர வடிவம். பைரவர் நம்மை நவக்கோள்களின் பாதிப்பிலிருந்து காப்பார். கர்மவினைகளை வேரோடு சாய்ப்பார். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். சிவ வழிபாட்டின் இறுதி நிலையே பைரவர் வழிபாடு ஆகும்.எத்தனையோ பிறவிகளில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே பைரவர் வழிபாடு செய்கின்றனர். முதலில் காலபைரவரை வழிபாடு செய்யும் அனைவரும் படிப்படியாக சொர்ணபைரவர் வழிபாடும் செய்வார்கள். பின்பு இரண்டு வழிபாடுகளும் தொடர்ந்து செய்வார்கள். இறுதியில் சொர்ணபைரவர் வழிபாடு மட்டும் செய்வார்கள். இது தான் பைரவர் வழிபாட்டின் ரகசியம் ஆகும்.

“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சொர்ணபைரவாய ஹும் பட் ஸ்வாஹா”

Thursday, 6 March 2014

சிவனின் மூலமந்திரம்

நமசிவய   என்னும் ஐந்தெழுத்து மந்திரம்

‎"நமசிவய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம்.
சிவம் என்றால் மங்களம் என்று பொருள்.

யஜுர் வேதத்தின் நடு நாயகமானது ஸ்ரீருத்திரம். 
அதன் நடுநாயகமே"நமசிவய". 
 
தீக்கை பெற்றிருந்தாலும், பெறாவிடினும் "நமசிவய" என தாயைக் கூவியழைக்கும் சேய்போல் அழைக்க யாவருக்கும் உரிமை உண்டு.
 
கடல் தன்மயமாய் இருந்துகொண்டு அதில் வந்து சேரும் நீரையெல்லாம் தன்மயமாக்குவதைப்போல், சிவனும் தன்னை நம்பி வருவோர் அனைவரையும் சிவமயமாக்குகிறார்.

பிரபஞ்சம் நாதம் அல்லது ஓசையின்தூலவடிவே. இறைவன் நாதமாயும், நாதத்திற்கு அப்பாற்பட்டும் உள்ளான்

மீண்டும் உங்களுக்காக சிவனருள் சிவமயம் வளரும்

நீண்ட இடைவெளிக்குப்பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

என்னுடைய வேலை மற்றும் பகுதி நேர படிப்பின் காரணமாக என்னுடைய இந்த வலைப்பூவை தொடர்ந்து புதுப்பிக்காமல் போனது.

அந்த சிவனின் அருளால் என்னுடைய படிப்பை நல்ல படியாக முடித்துவிட்டேன். அவனுடைய அருளே அருள்.

இனி மீண்டும் உங்களுக்காக புதுப்பதிவுகளும் வலம் வருவேன்....சிவனருள் பதிவன்