Saturday, 26 February 2011

மகாசிவராத்திரி உங்கள் வீட்டில் எழிலோடு எழில் கூட்ட.

மகா சிவராத்திரி பற்றி அனைவரும் அறிந்ததே. இந்த மகாசிவராத்திரியில் உங்களுக்காக நான் தருவது இந்த புகைப்படத்தைதான். முடிந்தவரையில் இந்த படத்தை நகலெடுத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜித்து ஈசனின் அருளைபெருங்கள் என்பதே.சிவம் எ‌ன்ற சொல்லுக்கு சுகம் எ‌ன்று பொருள் உள்ளது. உலகம் அழிந்தபோது மீண்டும் உலகை உருவாக்க பார்வதிதேவி சிவனை வழிபட்டு இரவு முழுவதும் இருந்த விரதமே "சிவராத்திரி விரதம்' எனப்படுகிறது. இந்த விரதத்தை முறைப்படி கடைபிடிக்க வேண்டும். சிவராத்திரி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் நன்மை பெருகும்.


நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து சிவராத்திரிகள் உள்ளன.

மகா சிவராத்திரி
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.
சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்? சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

Tuesday, 8 February 2011

போகரின் ஜீவ சமாதி அமைந்துள்ள இடம்

முருகனின் ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தளமாக இன்றும் விளங்கி வருவது பழனி. பழனியில் பழனி ஆண்டவரின் சந்நிதியின் அருகிலேயே போகர் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

பழனி முருகனை தரிசனம் செய்துவிட்டு அவரது பிரகாரத்தை சுற்றி விட்டு வெளியே வரும்போது பிரசாதம் கொடுப்பார்கள். அந்த இடத்திற்கு அருகிலேயே போகரின் ஜீவ சமாதி இடம் அமைந்திருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இது தெரியாது. சிறிய குகை போல் இருக்கும் அதன் நுழைவாயில். முருகரின் பரம பக்தர் போகர் என்பது குறிபிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அனைவரும் அறிந்த பழனி மஊலவரின் அருகிலேயே இருக்கும் நவ பாசான சிலையை செய்தவரும் இவர்தான்.
போகரின் தரிசனம் பெருக முருகனருள் அடைக.

பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திருவாவினன்குடி ஆகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அருளி அவரை மகிவிக்கிறார் இந்த குழந்தை வெலாயூதர். இது முற்றிலும் உண்மை.

பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது

Monday, 7 February 2011

பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம்

இராமேஸ்வரம் அதாவது 12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்று. இந்த ஆலயத்தின் வரலாறு அனைவரும் அறிந்ததே.

இந்த ஆலயத்திற்குள்தான் இருக்கிறது பதஞ்சலி முனிவரின் அதாவது பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி.மூலவரை தரிசித்துவிட்டு அவரின் சன்னிதானத்தை கடந்து பர்வதவர்தினி அம்மனை தரிசித்து விட்டு சுற்றி வரும்போது அடுத்த பிரகாரத்தில் வலது பக்கத்தில் ஒரு சந்நிதி இருக்கும். அதற்குள் ருத்ராட்ச மாலைகள் நிறைந்திருக்கும் மிகவும் அமைதியான சூழல் இருக்கும். ருத்ராட்சத்தால் ஒரு சமாதி முழுதும் நிறைந்திருக்கும். அதுதான் பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி.
பலர் அந்த ஆலயத்தை தரிசித்திருப்பார்கள் ஆனால் அனைவரும் இவரை தரிசிதிருப்பர்களா என்பது ஐயமே. அனைவரும் இவர் இருக்கும் இடத்தை கடந்து வந்திருப்பிர்கள்.இனிமேல் இராமேஸ்வரம் செல்பவர்கள் இவரையும் தரிசனம் செய்வீர்கள் என்பதில் ஐயமில்லை.

அதே சந்நிதியில் 18 சித்தரிகளின் ஜீவ சமாதி இருக்கும் இடங்களை குறிப்பாக வைத்து பாடப்பெற்ற பாடல் இருக்கும்.

நன்றி

பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம்

பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ள இடம்

நாங்கள் இவரின் ஜீவ சமாதியை தரிசித்தது இவரின் கருணையே என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் நாங்கள் மாலை நேரத்தில் ஆலயம் திறக்கும் முன்னரே சென்று விட்டோம்.. சங்கரன்கோயில் ஆலயம் திறக்க நேரமாகும் என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்துகொண்டிருந்த வேலையில் அங்கே பூ விற்பவர்களிடல் கேட்டோம் இங்கு வேறு ஆலயம் உள்ளதா என்று? அவர்கள் மூலம் எங்களுக்கு வழிகாட்டியதே அந்த சங்கரந்தானே என்று என்னும்போது மனம் கொன்ட மகிழ்ச்சிகு எல்லை இல்லை.

சங்கரன் கோயில் ஆலயத்தின் மேற்கு கோபுர வாசல் வழியாக நடந்து சென்றால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இவரின் ஜீவ சமாதி. ஆட்டோவிலும் செல்லலாம்..ஆனால் ஆட்டோகாரரிடம் சித்தர் சமாதி என்று சொல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆலயத்தின் வாசலில் பூ பழம் விற்பவர்களிடம் வழி கேட்டாலும் சரியாக சொல்வார்கள்.சங்கரன் கோவிலில் மேற்குக் கோபுர வாசல் அருகே புளியங்குடி செல்லும் சாலையில், பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி பீடம் அமைந்துள்ளது.
சங்கரன் கோயில் ஆலயத்தை அடைந்து சங்கரனாராயனரை தரிசனம் செய்யுங்கள். தரிசனம் முடிந்ததும் ஆலயத்தை விட்டு வெளியே வந்ததும் ஆலயத்தின் பின்புறமாக நடந்து செல்லுங்கள். ஒரு சாலை வரும் அந்த சாலையில் வலது புறமாக வலந்து சுமார் 1 கிலோ மிட்டார் தூரம் நடந்ததும் சாலையை ஒட்டி ஒரு குளம் இருக்கும் அதே இடத்தில் ஒரு தகவல்பலகையும் இருக்கும் அதுதான் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கும் இடம்.
சாலையில் இடது புறமாக அல்லது வலது புறமாக வலைவதில் குழப்பம் இருந்தால் அருகில் இருக்கும் சிலரிடம் விசாரித்து செல்லுங்கள்.

பாம்பாட்டி சித்தரின் தரிசனம் பெருக ஈசன் அருள் அடைக

மருத மலையிலும் அவரது ஜீவ சமாதி இருக்கிறது. சித்தர்கள் பல இடங்களில் ஜீவ சமாதி அடையும் திறன் படைத்தவர்கள்