Sunday, 26 December 2010

ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்

ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்


ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.இம் மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும்.

ஏனென்றால் புராண காலத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின் பரிகாரத்தலமாக இருந்துள்ளது. ஆனால் எப்படியோ இன்று மாறிவிட்டது.

Thursday, 16 December 2010

உங்களின் தேடல்தான் என்ன? - 2

உங்களின் தேடல்தான் என்ன?

வாழ்க்கையில் பல கரடு முரடான பாதைகளை சந்தித்து வந்தவன் நான். கடவுளை காண முடியாதா என ஏங்கிக்கொண்டிருக்கும் பல இதயங்களை போல என் இதயமும் காத்து இருக்கிறது என்பது உண்மை. ஆனால் பல வடிவங்களில் பல ஆலயங்களில் மனித வடிவில் அவரின் லீலைகளை கண்டுள்ளேன். கனவுகளில் முதலில் காட்சி அளித்து பின்னர் அதே ஆலயத்தை நேரில் தரிசிக்கும் பலனையும் பெற்றுள்ளேன்.

இதற்காக எனக்கு குரு இருக்கிறார் என்று எண்ண வேண்டாம். அவனையே குருவாக முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் போது அவர் அருள் நிச்சயம் கிடைக்கும்.

உங்களின் உண்மையான தேடல் என்ன என்பதை கண்டறிந்த பின் அந்த கோரிக்கையை அவர் முன் வையுங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார்.

பல வலை தளங்களில் அனவரும் குரு எப்படி கிடைப்பார்? எனக்கு அந்த பாக்கியம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்,

அவன் அருளால் அவந்தாள் வணங்கு, அனைத்தும் அம்சமாக கிடைக்கும்.

அதற்காக உங்களின் நேரத்தை வீணடிக்காதிர்கள் என்பதே என் கருத்து.

இறைவன் யாருக்கு எப்போது அருள்வான் என்பது யாருக்குமே தெரியாது.

அவன் அன்றி ஓரணுவும் அசையாது என்பது போல அவன் செயலும் அவனை அன்றி யாரும் அறியார். இது ஏற்கனவே எழுதப்பட்டதோ எழுதப்படாததோ என்பது எனக்கு தெரியாது ஆனால் இதுதான் நிசப்தமான உண்மை.

அண்ட சராசரங்களும் அகில லோகத்தையும் ஆட்டுவிக்கும் கடவுளுக்கு தெரியாதா நமது தேடல் என்னவென்று தேவை என்னவென்று.அவனை நாடி
அவன் அருளை தேடி
அவன் பாதம் தொழுவோர்க்கு
அன்பே உருவாக
அவன் காட்சி கிடைக்கும்...........!!!


தேடலின் அடுத்தப்பதிவு மீண்டும் நேரம் வரும்போது தொடருவேன்.

Tuesday, 7 December 2010

கருட தரிசனம் - கும்பாபிஷேகம்

கருட தரிசனம் - கும்பாபிஷேகம்சமீபத்தில் நான் இந்த பதிவை போகி மூலமாக பார்த்தேன். பிறகு இணையத்தில் தேடியதில் தமிழ் இந்து. நெட் தளத்தில் இன்னும் பிற தலங்களிலும் இதே பதிப்பை பார்த்தேன். அதற்கு பின்னூட்டமும் அளித்தேன். ஏனோ தெரியவில்லை எனது பின்னூட்டத்தை அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆகவே எனது கருத்தை என்னுடைய இந்த வலையில் சொல்லலாம் என்றெண்ணி இங்கே இந்த பதிவு.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

கருட தரிசனம் கர்ம பலன் நீங்கும்.

முதல் வரி முன்னோர்கள் சொன்னது. இரண்டாவது வரி என்னுடைய கருத்து.

அவ்வளவு எளிதில் எல்லோரும் கருடனை காண முடியாது. எந்த தினத்தில் காணுகிறோமோ அந்த தினத்திற்கு என்று பலன்கள் உண்டு. உலகலந்த பெருமானின் வாகனம், உலகை காக்க தர்மத்தை நிலை நாட்ட பிறவி எடுக்கும் பகவானின் அமர்வு பீடம் கருட தேவன்.

கருட தேவனுக்கு என்று காயத்ரி மந்திரமும் உண்டு.

இங்கே நான் சொலவது என்ன வென்றால், அவர்களின் கருத்துப்படி கூட்டம் சேரும் இடத்தில் கருடன் வருவார் என்கிறார்கள்,

அப்படியானால் ஏன் அரசியல் கூட்டம் போடும் இடங்களிலும் திருவிழாக்காலங்களில் மக்கள் அலை மோதும் இடங்களிலும் கருடன் வருவதில்லை.

ஏன் கிரிக்கெட் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி இருக்கும்பொது ஏன் அங்கே கருடன் வட்டமடிக்க வருதில்லை.. அவர்கள் சொல்வதுபடி பார்த்தால் இது நடக்க வேண்டுமல்லவா?

ஆனால் கோயில் கும்பாபிசேகம் நடைபெரும் இடங்களில் கருடன் வருகிறார் என்றால் அதுதான் தெய்வத்தின் அருள் என்பது. இதில் சிறிய கோயில் பெரிய கோயில் என்பதில்லை.
ஏனோ என்னால் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆகவேதான் இந்த பதிப்பு. என் மனதில் தோன்றியதை இங்கு பதிக்கிறேன் அவ்வளவே.
கருட தரிசனம் காணும்போதெல்லாம் பாப விமோசனம்.

Thursday, 2 December 2010

உங்களின் தேடல்தான் என்ன? - 1

உங்களின் தேடல்தான் என்ன?

இந்த கேள்வியை நீங்கள் படித்த உடன் உங்களுக்குள் கன்டிப்பாக தேடிப்பார்ப்பீர்கள் என்னதான் உங்களின் தேவை என்று.

ஆனால் ஒரு நிமிடம் இந்த கேள்வியை படித்ததும் தயவு செய்து உங்களின் தேடல்தான் என்ன என்று அமைதியாக ஒரு நிமிடம் யோசித்து தெளிவு பெருங்கள்.


பிறகு அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்.

அதற்கான முயற்சியில் இறங்குங்கள்.

அனைத்தும் அவன் அருளால் அம்சமாக நடந்தேறும்.

ஏனோ தெரியவில்லை சில நேரங்களில் ஏன் பிறந்தோம் என்று யோசிப்பேன். ஆனால் விடை கிடைக்காமல் விட்டு விட்டு மீண்டும் மனம் போன போக்கில் வாழ்க்கையை செலுத்த ஆரம்பித்துவிடுவேன்.


இது நாள் வரையில் என் வாழ்க்கையை நடத்துபவனும் அவனே நடத்திகொண்டிருப்பவனும் அவனே என்னை நல்லது செய்ய வைப்பனும் அவனே தீயது செய்ய வைப்பவனும் அவனே.

என்ன நானே தவறு செய்தாலும் அவன் தான் பொறுப்பு என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு தேற்றிக்கொள்வேன். அதனால்தானோ என்னவோ மீண்டும் அதே தவறை செய்தாலும் அடுத்த முறை செய்ய முடியாமல் தடுத்தும் விடுகிறான்.


பலர் தேடித்தேடி கடைசிவரையில் விடைகாண முடியாமல் அப்படியே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள்.

சிலர் விடை கன்டுபிடித்தாலும் கடைந்தேர முடியாமல் போய்விடுகிறது, அதற்கு காரணம் இந்த கலியுகம்,.

பலர் குருவைத் தேடித் தேடித் நேரத்தை செலவழித்து விடுகின்றனர்.ஆனால் இந்த கலியுகத்தில் குரு கிடைக்கவேண்டியவர்களுக்கு மட்டும்தான் குரு கிடைப்பார் என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இந்த இறையை நீங்கள் மனதார நினைத்து நினைவால் தினமும் ஆராதனையும் பாராயணமும் செய்தால் அந்த இறையே குருவாக உங்களுக்கு வந்துத்திப்பார். அல்லது உதிக்க வைப்பார். ஏன் இது??? நிற்க, யோசிக்க.


இறையே உங்களுக்காக உதவ வரும்போது ஏன் ஒரு குரு...அவரே குருவாகி விடுவாரே எனும்போதினிலே..!

அருவாகி

உருவாகி நீயே

குருவாகி

உன்னில் என்னை கலந்தாகி

என்னுள் உன்னை உருவாக்கி

எனை நீ அருவாகும் போதினிலே....


என்னிறையே உன்னை என்னென்று போற்றுவேன்...


மீண்டும் இதன் அடுத்த பதிப்பு நேரம் வரும்போது தொடருவேன்.

சதாசிவலிங்கத்தின் சர்வ தரிசனம்

சதாசிவலிங்கத்தின் சர்வ தரிசனம்

இவர் உள்ள இடம் பரலி வைத்தியனாதரின் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளார்.

அதுவும் காலகாலமாக இவருக்கு வழிவழியாக இவரை வணங்கி வந்த பரம்பரை ஸ்தாபர்களின் ஜீவ சமாதிகளுக்கு அருகில் அமந்துள்ளது இந்த ஆலயம். இங்கே பூமிக்கடியில் ஒரு மகான் ஜீவ சமாதியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதோ சதாசிவத்தின் சர்வ தரிசனம்

ஆலயங்களில் உள்ளே போகும்போது கொஞ்சம் அதிர்வுகள் தெரியும். இந்த அதிர்வுகளை நான் பல ஆலயங்களில் மூலவரை தரிசனம் செய்யும்போது உணர்ந்துள்ளேன். அதுபோல அதிர்வுகளை இந்த சிறிய ஆலயத்திலும் கண்டேன். நீங்களும் பரலி வைத்திய நாதரை தரிசனம் செல்ல நேர்ந்தால் இந்த ஆலயத்தையும் தரிசனம் செய்து வாருங்கள்.
படம் பெரியதாக தெரிய படத்தின்மீது கிளிக் செய்யவும்