Saturday 26 February 2011

மகாசிவராத்திரி உங்கள் வீட்டில் எழிலோடு எழில் கூட்ட.

மகா சிவராத்திரி பற்றி அனைவரும் அறிந்ததே. இந்த மகாசிவராத்திரியில் உங்களுக்காக நான் தருவது இந்த புகைப்படத்தைதான். முடிந்தவரையில் இந்த படத்தை நகலெடுத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜித்து ஈசனின் அருளைபெருங்கள் என்பதே.



சிவம் எ‌ன்ற சொல்லுக்கு சுகம் எ‌ன்று பொருள் உள்ளது. உலகம் அழிந்தபோது மீண்டும் உலகை உருவாக்க பார்வதிதேவி சிவனை வழிபட்டு இரவு முழுவதும் இருந்த விரதமே "சிவராத்திரி விரதம்' எனப்படுகிறது. இந்த விரதத்தை முறைப்படி கடைபிடிக்க வேண்டும். சிவராத்திரி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் நன்மை பெருகும்.


நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து சிவராத்திரிகள் உள்ளன.

மகா சிவராத்திரி
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.
சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்? சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

No comments:

Post a Comment