Monday 7 February 2011

பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம்

இராமேஸ்வரம் அதாவது 12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்று. இந்த ஆலயத்தின் வரலாறு அனைவரும் அறிந்ததே.

இந்த ஆலயத்திற்குள்தான் இருக்கிறது பதஞ்சலி முனிவரின் அதாவது பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி.மூலவரை தரிசித்துவிட்டு அவரின் சன்னிதானத்தை கடந்து பர்வதவர்தினி அம்மனை தரிசித்து விட்டு சுற்றி வரும்போது அடுத்த பிரகாரத்தில் வலது பக்கத்தில் ஒரு சந்நிதி இருக்கும். அதற்குள் ருத்ராட்ச மாலைகள் நிறைந்திருக்கும் மிகவும் அமைதியான சூழல் இருக்கும். ருத்ராட்சத்தால் ஒரு சமாதி முழுதும் நிறைந்திருக்கும். அதுதான் பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி.




பலர் அந்த ஆலயத்தை தரிசித்திருப்பார்கள் ஆனால் அனைவரும் இவரை தரிசிதிருப்பர்களா என்பது ஐயமே. அனைவரும் இவர் இருக்கும் இடத்தை கடந்து வந்திருப்பிர்கள்.இனிமேல் இராமேஸ்வரம் செல்பவர்கள் இவரையும் தரிசனம் செய்வீர்கள் என்பதில் ஐயமில்லை.

அதே சந்நிதியில் 18 சித்தரிகளின் ஜீவ சமாதி இருக்கும் இடங்களை குறிப்பாக வைத்து பாடப்பெற்ற பாடல் இருக்கும்.

நன்றி

3 comments:

  1. அன்புள்ள சிவனருள் ,

    அருமையான பதிவு,

    பதஞ்சலியரின் ஜீவசமாதி மற்றோர் இடத்திலும் உண்டு.

    திருச்சி செல்லும் வழியில் சிறுகனூர் என்னும் இடத்திலருந்து மேற்கே ஐந்து மைல் தொலைவில் திருப்பட்டூர் என்னும் கிராமத்தில் உள்ளது.

    தொடர்ப்புக்கு :

    http://www.brahmatemple.org/brahma_YogiPatanjali.ஹதம்


    http://gurumuni.blogspot.com/

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  2. மிக்க நன்றி உங்களின் தகவலுக்கு பாலா. நான் பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதியை இங்கு தரிசித்தேன். சித்தர்கள் பல இடங்களில் ஜீவ சமாதி அடைகின்றனர். முயற்சிக்கிறேன் அவரின் அந்த ஜீவ சமாதி தரிசன்ம் செய்வதற்கும்.

    இன்னும் நான் அங்கு செல்ல ஆசி கிடக்கவில்லை. நான் பதித்து எல்லாமே நான் தரிசனம் செய்த இடங்களே.

    அவன் அருளால் இன்னும் தொடரும்

    ReplyDelete
  3. thanks for sharing...

    கோவையில் உள்ள ஜீவ சமாதிகள் பற்றி அறிய

    http://spiritualcbe.blogspot.in

    ReplyDelete