Tuesday, 7 December 2010

கருட தரிசனம் - கும்பாபிஷேகம்

கருட தரிசனம் - கும்பாபிஷேகம்சமீபத்தில் நான் இந்த பதிவை போகி மூலமாக பார்த்தேன். பிறகு இணையத்தில் தேடியதில் தமிழ் இந்து. நெட் தளத்தில் இன்னும் பிற தலங்களிலும் இதே பதிப்பை பார்த்தேன். அதற்கு பின்னூட்டமும் அளித்தேன். ஏனோ தெரியவில்லை எனது பின்னூட்டத்தை அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆகவே எனது கருத்தை என்னுடைய இந்த வலையில் சொல்லலாம் என்றெண்ணி இங்கே இந்த பதிவு.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

கருட தரிசனம் கர்ம பலன் நீங்கும்.

முதல் வரி முன்னோர்கள் சொன்னது. இரண்டாவது வரி என்னுடைய கருத்து.

அவ்வளவு எளிதில் எல்லோரும் கருடனை காண முடியாது. எந்த தினத்தில் காணுகிறோமோ அந்த தினத்திற்கு என்று பலன்கள் உண்டு. உலகலந்த பெருமானின் வாகனம், உலகை காக்க தர்மத்தை நிலை நாட்ட பிறவி எடுக்கும் பகவானின் அமர்வு பீடம் கருட தேவன்.

கருட தேவனுக்கு என்று காயத்ரி மந்திரமும் உண்டு.

இங்கே நான் சொலவது என்ன வென்றால், அவர்களின் கருத்துப்படி கூட்டம் சேரும் இடத்தில் கருடன் வருவார் என்கிறார்கள்,

அப்படியானால் ஏன் அரசியல் கூட்டம் போடும் இடங்களிலும் திருவிழாக்காலங்களில் மக்கள் அலை மோதும் இடங்களிலும் கருடன் வருவதில்லை.

ஏன் கிரிக்கெட் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி இருக்கும்பொது ஏன் அங்கே கருடன் வட்டமடிக்க வருதில்லை.. அவர்கள் சொல்வதுபடி பார்த்தால் இது நடக்க வேண்டுமல்லவா?

ஆனால் கோயில் கும்பாபிசேகம் நடைபெரும் இடங்களில் கருடன் வருகிறார் என்றால் அதுதான் தெய்வத்தின் அருள் என்பது. இதில் சிறிய கோயில் பெரிய கோயில் என்பதில்லை.
ஏனோ என்னால் அந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆகவேதான் இந்த பதிப்பு. என் மனதில் தோன்றியதை இங்கு பதிக்கிறேன் அவ்வளவே.
கருட தரிசனம் காணும்போதெல்லாம் பாப விமோசனம்.

9 comments:

 1. நானும் அந்த பதிவை பார்த்தேன்.அதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.கருடன் வருவது தவறு என்று கூறவில்லை.கருடன் வந்தே ஆகவேண்டும் என்றோ,கருடன் வந்தால்தால் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்று கூறுவது தான் தவறு என்கிறார்.மேலும் கருடன் வரவேண்டும் என்பதற்கு ஆலய சாஸ்திரத்தில் சான்று இல்லை என தெளிவாகக்கூறியுள்ளாரே

  ReplyDelete
 2. நானும் ஒத்துக்கொள்கிறேன். எல்லா கும்பாபிசேகத்திற்கும் கருடன் வந்துதான் ஆக வேண்டுமென்பதில்லை.

  ஆனால் அவர், கூட்டம் சேருமிடத்தில் எல்லாம் கருடன் வரும் என்றாரே அதுதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் இந்த பதிவும் இந்த கேள்வியும்.

  மற்றபடி குறை சொல்ல வேண்டும் எனது என் எண்ணமில்லை

  ReplyDelete
 3. வணக்கம்,
  இவ்விஷயத்திற்கு நீங்கள் இவ்வளவு கோபப்படுதல் தேவையற்றது என்பது என் கருத்து.ஏனெனில் கட்டுரையாளர் ஒரு அர்ச்சகர்.எனவே அவர் அனுபவத்தில் நேர்ந்த விஷயத்தை எழுதியிருக்கலாம்.நான் அக்கட்டுரையை படித்தவரை கருட தரிசனத்தை அவர் குறைகூற வில்லை.ஆனால் கருடன் கட்டாயம் வரவேண்டும் என்பதையே அவர் குறை கூறுகிறார்.மேலும் அவர் பதிவில் தங்களின் பின்னூட்டமும் வந்துள்ளதே.அதில் கொஞ்சம் காரம் தெரிகிறது.ஆன்மீகம் அமைதிக்காகவே,எதையும் சாத்வீகமாக கையாளவேண்டும்.இது எனது வேண்டுகோள்.மேலும் எனது வலைப்பூவையையும் படித்து தங்கள் கருத்தை பதியலாமே!

  ReplyDelete
 4. அனைவரும் இப்படித்தான் சொல்லிவிடுகின்றனர் நண்பரே. அமைதியாக இருந்தால்தான் ஆன்மிகம் என்பதில்லை. அதற்காக நான் ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வதுமில்லை. கடவுளை முழுமனதாக நம்புபவன். என் மனதிற்கு சரி என்று படுவதை ஏற்றுக்கொள்பவன். ஆமாம் நான் பின்னூட்டம் இட்ட சில நாட்களுக்குப்பிறகுதான் (இந்த பதிவை போட்டபின்) அங்கே எனது கருத்தை வெளியிட்டுள்ளார்கள்.

  யார் எதை சொன்னாலும் நாம் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை நமக்கு எது சரி என படுகிறதோ அதையே ஏற்றுக்கொள்கிறோம் சரிதானே?

  கூட்டம் இருந்தால் கருடன் வரும் என்று சொல்கிறார் அதுதான் எனக்கு நெருடலே தவிர மற்றபடி வேறொன்றுமில்லை.

  கன்டிப்பாக உங்களின் வலைதளத்தையும் படித்து எனது கருத்தை தெரிவிக்கிறேன்.

  நன்றி

  ReplyDelete
 5. அய்யா வணக்கம் நான் தமில்ஹிண்டு நடத்துனர் எங்கள் தளத்திலிருந்து உங்கள் மறுமொழி நீக்கப்பட்டதா அப்படி நடந்திருப்பின் தவறுக்கு மன்னிக்கவும் தங்கள் சந்தேகத்தை கூறும் போட்சத்தில் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம்

  ReplyDelete
 6. தங்களுடைய தளத்திலும் அந்த பதிவை பார்த்தேன் அதைத்தான் சொல்லி உள்ளேன். உங்களுடைய தளத்தில் நான் பின்னூட்டத்தை பதிய வில்லை. மற்றொரு ப்ளாக்கில்தான் பின்னூட்டம் பதித்தேன் ஆனால் தாமதமாகத்தான் என் கருத்தை வெளி இட்டார்கள்.

  ReplyDelete
 7. நீங்கள் கூறியது தவறான கருத்துகள் நான் இதையேற்றுக்கொள்ளமாட்டேன்,

  ReplyDelete
 8. எனக்கும் இந்து மதத்தில் அதீத ஈடுபாடு உண்டு ஏனெனில் இந்து மதம் வெரும் மார்க்கம் மட்டுமல்ல ஒவ்வொன்றும் அறிவியல்...கருடன் வருவது கூட்டமான இடங்களில் என்று தவறாக சொல்லியிருக்கிறார்கள் என்று கட்டுறையாளர் சொல்லியிருக்கிறார் உண்மை தான் கும்பாபிசேக நாட்களில் கருடன் வரக்காரணம் கும்பாபிசேகம் செய்யும் போது அதிக தானியங்கள் பயன் படுத்துவார்கள் கருடன் கண்களுக்கு அது தெளிவாக தெரியும் அதால் தான் அந்த நாளில் கருடன் வருகிறது ஏன் தானியங்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்று கூட இதை வைத்து அறியலாம்.
  கலசத்தில் போடத்தானே என கருகிய தானியங்கள் வைத்தால் கருடல் வராது...
  கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப் பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில்கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியி னை (earth) கலசங்களுக்கு கொடுக்கி ன்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்) ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமா க கொட்டினார்கள். காரணத்தை தேடிப் போனால் ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிற து. அப்போது எந்த கல்லூ ரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
  இவ்வளவுதானா, இல்லை, பனி ரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் “கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிற து”, அதை இன்றைக்கு சம்பரதாய மாக மட்டுமே கடைபிடிக்கிறார்க ள். காரண த்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது

  இந்து மதம் அறிவியலின் முடிவில்லா ஆரம்பம் தொடர்ந்து தேடுங்கள்...

  ReplyDelete
 9. ஸ்ரீ சிற்றம்பலேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் போது கருடலோக சித்தர்களின் சஞ்சாரம் ........
  http://www.spiritualcbe.blogspot.in/2013/01/blog-post.html

  ReplyDelete