உங்களின் தேடல்தான் என்ன?
இந்த கேள்வியை நீங்கள் படித்த உடன் உங்களுக்குள் கன்டிப்பாக தேடிப்பார்ப்பீர்கள் என்னதான் உங்களின் தேவை என்று.
ஆனால் ஒரு நிமிடம் இந்த கேள்வியை படித்ததும் தயவு செய்து உங்களின் தேடல்தான் என்ன என்று அமைதியாக ஒரு நிமிடம் யோசித்து தெளிவு பெருங்கள்.
பிறகு அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்.
அதற்கான முயற்சியில் இறங்குங்கள்.
அனைத்தும் அவன் அருளால் அம்சமாக நடந்தேறும்.
ஏனோ தெரியவில்லை சில நேரங்களில் ஏன் பிறந்தோம் என்று யோசிப்பேன். ஆனால் விடை கிடைக்காமல் விட்டு விட்டு மீண்டும் மனம் போன போக்கில் வாழ்க்கையை செலுத்த ஆரம்பித்துவிடுவேன்.
இது நாள் வரையில் என் வாழ்க்கையை நடத்துபவனும் அவனே நடத்திகொண்டிருப்பவனும் அவனே என்னை நல்லது செய்ய வைப்பனும் அவனே தீயது செய்ய வைப்பவனும் அவனே.
என்ன நானே தவறு செய்தாலும் அவன் தான் பொறுப்பு என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு தேற்றிக்கொள்வேன். அதனால்தானோ என்னவோ மீண்டும் அதே தவறை செய்தாலும் அடுத்த முறை செய்ய முடியாமல் தடுத்தும் விடுகிறான்.
பலர் தேடித்தேடி கடைசிவரையில் விடைகாண முடியாமல் அப்படியே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள்.
சிலர் விடை கன்டுபிடித்தாலும் கடைந்தேர முடியாமல் போய்விடுகிறது, அதற்கு காரணம் இந்த கலியுகம்,.
பலர் குருவைத் தேடித் தேடித் நேரத்தை செலவழித்து விடுகின்றனர்.
ஆனால் இந்த கலியுகத்தில் குரு கிடைக்கவேண்டியவர்களுக்கு மட்டும்தான் குரு கிடைப்பார் என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இந்த இறையை நீங்கள் மனதார நினைத்து நினைவால் தினமும் ஆராதனையும் பாராயணமும் செய்தால் அந்த இறையே குருவாக உங்களுக்கு வந்துத்திப்பார். அல்லது உதிக்க வைப்பார். ஏன் இது??? நிற்க, யோசிக்க.
இறையே உங்களுக்காக உதவ வரும்போது ஏன் ஒரு குரு...அவரே குருவாகி விடுவாரே எனும்போதினிலே..!
அருவாகி
உருவாகி நீயே
குருவாகி
உன்னில் என்னை கலந்தாகி
என்னுள் உன்னை உருவாக்கி
எனை நீ அருவாகும் போதினிலே....
என்னிறையே உன்னை என்னென்று போற்றுவேன்...
மீண்டும் இதன் அடுத்த பதிப்பு நேரம் வரும்போது தொடருவேன்.
No comments:
Post a Comment