Friday 12 November 2010

அதிசய அபூர்வமான நந்தி - நிற்கும் நந்தி பகவான்.

அதிசய அபூர்வமான நந்தி - நிற்கும் நந்தி பகவான்.

தீபாவளி அன்று உஜ்ஜயினி மகா காளேஸ்வரரின் தரிசனம் கண்டேன். நான் பல முறை மகா காளேஸ்வரரை தரிசித்துவிட்டு இந்த ஆலயத்தையும் தரிசனம் செய்வேன். ஆனால் எப்போது நான் இதை குறிப்பாக கவனித்தது இல்லை, என்ன என்று கேட்கிறீர்களா?

அதுதான் நிற்கும் நந்தி.

உஜ்ஜயினியில் உள்ளூர் ஆலய தரிசனம் செய்யூம்போது பார்த்த பல படங்களை ஏற்கனவே போட்டுள்ளேன். ஆனால் இந்த ஆலயத்தின் போட்டோவை இப்போதுதான் பதிக்கிறேன்.

இங்கு உள்ள சிவனின் பெயர் குண்டேஸ்வரர். சிவன் விஷ்னு மற்றும் வாமன அவதாரம் எடுத்த விஷ்னு திருப்பதி ஏழுமலையானை ஒரு சேர இந்த ஆலயத்தின் கருவரையில் தரிசிக்கலாம்.



குன்டேஸ்வரர் மகாதேவ்



ஆலயத்தின் முன் நின்ற நிலையின் அருள் பாலிக்கும் நந்தி தேவர்








அதாவது மும்மூர்த்திகளும் நின்று இருக்கும்போது தனது தெய்வம் சிவனும் நிற்கும்போது தாம் அமர்வது முறையல்ல என்று மரியாதையின் நிமித்தமாக இந்த நந்தி தேவர் நிற்கிறார் என்பது புராணம்.

உங்களுக்காக அவரின் தரிசனம்


அதாவது சாந்திபனி ஆஸ்மரத்தின் உள்ளே உள்ளது இந்த ஆலயம். இங்குதான் பகவான் கிருஷ்ணர் குருகுல வாசம் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.


அடுத்த பதிவு மகாராஸ்டிராவில் அமைந்துள்ள ஜோதிர்லிங்கஸ்தலமான பரலி வைத்திய நாதரின் தரிசனம்.

No comments:

Post a Comment