Wednesday, 14 March 2012

காலபைரவர் ஆசிர்வாதம்

இன்று மறுபடியும் அந்த வீடீயோவை இனைக்க முயற்சித்தேன். அவரின் அருளால் அழகாக பதிவேற்ற முடிந்தது... மற்ற விவரங்கள் இந்த பதிவில் காண்க.....

http://sivanarul-sivamayam.blogspot.com/2010/06/blog-post_27.html

இரண்டு அசைபடங்கள் உங்களுக்காக... இரண்டாவது படத்தில் அவரின் அருள் கிடைப்பதை பாருங்கள்... ஒரு ஈ பறந்து வந்து அந்த எலுமிச்சை பழத்தின் மீது அமரும் சில வினாடிகள் அமர்ந்து பின் பறந்துசெல்லும். அதன் பிறகுதான் அந்த எலுமிச்சை சுற்றி விழும். இது ஒவ்வொறு வருடமும் நடக்கின்ற அதிசயம்.




Tuesday, 28 February 2012

தெரிந்தால் சொல்லுங்களேன்?!

தெரிந்தால் சொல்லுங்களேன்?!

பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கணவ சித்தர் ஜீவ சமாதி அடைந்தது திருப்பதி என்று பல இணைய தளங்களில் சொல்லி இருந்தாலும் குறிப்பாக அவரது ஜீவ சமாதி எங்கே இருக்குறது என்று எதிலும் சொல்லவில்லை.




இந்த தலைப்பை பார்க்கும் உங்களில் யாருக்காவது கொங்கணவர் சித்தர் ஜீவ சமாதி எங்கு இருக்கிறது என்றும் எப்படி செல்ல வேண்டும் என்று சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சொல்லி உதவுங்களேன் பல ஆன்மிக நெஞ்சஙக்ளுக்கு உதவியாக இருக்கும்

அடுத்த முறை திருப்பதி செல்லும்போது தரிசிப்பேன் என்ற நம்பிக்கையோடு.... காத்திருக்கிறேன்.

Friday, 3 February 2012

கலிகாலத்தில் காலனை வென்ற சிவபக்தர்.

கலிகாலத்தில் காலனை வென்ற சிவபக்தர்.

ஜீவ சமாதி அடைவது என்பது எளிதான விசயம் அல்ல.. அப்படி இருக்கும் போது அதையும் ஒருவர் இந்த கலிகாலத்தில் சாதித்து காட்டிஉள்ளார் என்றால் அவரின் தூய பக்தியும் அவரின் ஆத்மார்த்த பிரார்த்தனையும் எந்த அளவுக்கு உயர்ந்தது என்று எண்ணும்போதே மனம் நெகிழ்ச்சி கொள்கிறது அல்லவா?
இதோ அவரைப் பற்றிய தகவல் தினமலரில்.

இது மட்டுமில்லாமல் விஜய் டிவி நடந்தது என்ன குற்றமும் பின்னனியும் என்ற நிகழ்ச்சியில் அவரையும் அவர் ஜீவ சமாதி அடைந்ததையும் ஒளிப்பரப்பினர்.. முடிந்தால் அந்த விடியோ காட்சி இணைய தளத்தில் காணுங்கள்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=VWGGvR8ymSQ#!



Dinamalar News
திருத்தணி: கோவை மாவட்டம் தாராபுரம் அடுத்த உத்தமபாளையம் பகுதியில் பிறந்தவர் பழனிச்சாமி, 96. இவர், 56 ஆண்டுகளுக்கு முன், அரக்கோணம் அடுத்த போடிநாயுடுகண்டிகை கிராமத்திற்கு குடிவந்தார். சிவபக்தரான இவர், இக்கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் அருகே தங்கி, தினசரி ஒரு வீடு வீதம் இங்குள்ள, 30 வீடுகளில் சாப்பிட்டு வந்தார். இவர் தங்குவதற்கென இக்கிராம மக்கள், பெருமாள் கோவில் அருகே, அறை கட்டிக் கொடுத்துள்ளனர். இவர் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு மந்திரித்தல், ஜோசியம் பார்த்தல் ஆகியவற்றையும் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி அன்று கிராம மக்களை அழைத்து, "நான் வரும், 20ம் தேதி மாலை, 3 மணிக்கு இறந்து விடுவேன். எனவே எனக்கு, 6 அடி ஆழம், 3 அடி அகலத்தில் பள்ளம் தோண்டி புதையுங்கள்' என்றார். இதையடுத்து, பெருமாள் கோவில் அருகே ஜீவசமாதி கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. உயிருடன் இருக்கும்போதே புதைத்தால் கொலை வழக்கில் போலீசார் பிடித்து விடுவார்கள் என, கிராம மக்கள் பயந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அவர் கூறியதுபோல், அவரது உயிர் இன்று மதியம், 3.05 மணிக்கு பிரிந்தது. இதையடுத்து, கிராம மக்கள் முறைப்படி அவரது உடலை புதைத்து ஜீவசமாதி அமைத்தனர்.

எல்லாம் சிவமயம்

Monday, 16 January 2012

பஞ்ச முகம் கொண்ட சிவன்!!!

சிவனின் ஐந்து முகங்கள் அனைவரும் அறிந்ததே. அதிலுள்ள ஒவ்வொரு முகத்தின் பெயரும் அதன் வடிவமும் அனைவரும் அறியவே இந்த பதிவு.

ஒரு முகம் - சிவ சொருபம்

இரண்டு முகம் - சிவன் பார்வதி

மூன்று முகம் - ப்ரம்மா, விஷ்னு, சிவன் மூண்றையும் நெற்றிக்க்ண்ணில் ஆட்கொள்பவர்

நான்கு முகம் - ப்ரம்மா

ஐந்து முகம் - மேற்கண்ட நான்கு முகங்களையும் ஆட்கொண்டு ஐந்தாவது சொருபத்துடன் சேர்ந்து சதாசிவன் என போற்றப்படுகிறது.




பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆட்கொள்வதனாலும் இவரை ஐமுகக் கடவுள் என்று போற்றுகின்றனர்.

இதிலே அனைத்து தெய்வங்களின் அம்சங்களும் அடங்கிவிடுகிறது.



இதே போல அந்ததந்த முகம் கொன்ட ருத்ராட்சங்களை அணியும் போது அந்த சொருப தெய்வங்கள் நம்மில் சேர்ந்து அருளை பொழிகின்றன.


ஸ்ரீ சிவ காயத்ரி மந்திரம்




ஓம் தத் புருசாய வித்மஹே மகாதேவனாய தீமஹீ
தந்நோ ருத்ர பிரசோதயாத்.


என்ற சிவனின் காயத்ரி மந்திரத்தை இந்த தமிழர் திருனாள் முதல் ஓதி அவன் அருள் பெற்று அவனின் பாத கமலங்களை நோக்கி செல்ல அவனை வணங்கி அவந்தாள் பணிகிறேன்.

Monday, 19 December 2011

சனிஷ்வரரின் அதீத அருள் பெருக!!!

சனிஷ்வரரின் அதீத அருள் பெருக!!!



திருக்கொள்ளிக்காடு! - திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள திருநெல்லிக்காவிலிருந்து தெங்கூர், கீராலத்தூர் வழியாக இத்தலத்தை அடையலாம். சனி பகவானின் தோஷம் நீக்கும் தலங்கள் வரிசையில் இது தலையாயது.

சுவாமிபெயர் - அக்கினீசுவரர், தேவியார் - பஞ்சினுமெல்லடியம்மை.

இத்திருக்கோயிலை வலம் வந்து சனி பகவானை வழிபட்டுத் திருக்கொள்ளி அக்னீஸ்வரர் திருமுன்பு வீழ்ந்து வணங்குபவர்களின் சனி தோஷத்தைத் தன் ஜோதியால் எரித்துச் சாம்பலாக மாற்றுபவன் அவ்விறைவன் என்பதைத் தொன்மை நூல்கள் கூறுகின்றன.




1,500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இத்திருக்கோயிலை மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் கற்கோயிலாகப் புதுப்பித்தான். இக்கோயிலில் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள், முதலாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டு, அவனது மகன் முதல் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள், பிற சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன.

மேலும் அறிய
http://www.livingextra.com/2011/07/blog-post_28.html

தல வரலாறு

செய்த தவறுக்காக முற்றிலும் பலம் இழந்த சனி பகவான் , பின்பு மனம் வருந்தி, வசிட்ட முனிவரின் யோசனைப்படி அக்கின்வனம் எனும் இத்தலத்தில் கடுமையான தவமியற்ற ஈசன் மனமிரங்கி அக்னி உருவில் தரிசனம் தந்து சனி பகவானை பொங்கு சனியாக மறு அவதாரம் எடுக்கச் செய்ததுடன் இத்தலத்திற்கு வந்து தம்மையும் சனீஸ்வரரையும் வழிபடுவோர்க்கு சனிக்கிரகம் தொடர்பான எல்லா துர்பலன்களும் விலகும் என அருளினார். பொங்கு சனியாக அவதாரம் எடுத்து குபேர மூலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நன்றி லிவிங் எக்ஸ்ட்ரா தளம்

Saturday, 10 December 2011

பஞ்ச பூதங்கள்

நிலம் நீர் அக்னி காற்று வானம் இதுதானே பஞ்ச பூதங்கள் இதில் நாம் அனுபவிப்பது எத்தனை? நான்கை மட்டும்தான், நிலம் நீர் அக்னி காற்று.

இதில் வானம் என்பது என்ன? கொஞ்சம் யோசித்து பாருங்கள்?

ஆனால் இந்த பஞ்ச பூதங்களில் பெருமை வாழ்ந்தது வானம்... ஆனால் அதை அடைவது எளிதாக்குவது அக்னி. அக்னியை பொறுத்தவரையில் அது அக்னியாக இருக்கும்வரையில் அதை ஒன்றும் செய்ய முடியாது அதுதான் அக்னியின் சிறப்பே. அதுதான் சிவனின் மகிமையே... அந்த அக்னி சொரூபன் தான் அண்ணாமலையான் உண்ணாமலை உடனுரையான்



உருவமிள்ள ஒன்றுதான் வானம் நம் கண்ணின் பார்வைத்திறன் அப்பால் உள்ள பகுதி நீலமாக தெரியும் அதுதான் வானம்..... அதுதான் கடவுள்.

ஆனால் அதை அறிந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள்தான் சித்தர்கள் முனிவர்கள் ரிசிகள்... நாமெல்லாம் எங்கே?

மனிதனின் கையில் பட்ட அத்தனையுமே அவனுக்கு சொந்தமாக உள்ளது... அவன் சொன்னபடி அடிமை பட்டு அவன் செயலுக்கு ஏற்ப ஆடிகொண்டுள்ளது சரிதானே?

ஆனால் மனிதனின் கையில் அகப்படாத காற்றும் வானமும் அதனுடைய போக்கில் உள்ளது... அதை அடைவதும் அதை அறிவதும் தான் மனித பிறப்பின் நோக்கம் என்பது என் கருத்து.. காற்று அடக்கி அதாவது மூச்சை அடக்கி ஆள கற்றுகொண்டாலே ஒருவன் பாதி முக்தி அடைந்து விடுகிறான் அதன் பின் வெட்ட வெளி என்கிற அந்த பரப்பிரமத்தை அடைவது எளிதாகிறது....

அதை அடைபவர்கள் எத்தனை பேர்? அதற்குத்தான் அனைவரும் போராடுகிறோம். அதற்குத்தான் இறைவனின் அருள் தேவை அதனாலதான் அவனருளால் அவனை வணங்குகிறோம்....

அவன் அருளால் அவனை அடைதல் மகிழ்ச்சிதானே....

எல்லாம் அவன் செயல்.... அந்த அண்ணாமலையானின் திருநாளில் எழுத தோணியதை இங்கு எழுதிவிட்டேன்......

கார்த்திகை திருநாளில் அனைவரும் ஈசனின் அருளை பெற்று அனைவரும் அனைத்தையும் அடைய என் பரம்பொருள் தாழ் வணங்குகிறேன்

Sunday, 20 November 2011

உஜ்ஜையினி மாகாளி (கட் காளிகா)

உஜ்ஜையினி மாகாளி (கட் காளிகா)