சனிஷ்வரரின் அதீத அருள் பெருக!!!
திருக்கொள்ளிக்காடு! - திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள திருநெல்லிக்காவிலிருந்து தெங்கூர், கீராலத்தூர் வழியாக இத்தலத்தை அடையலாம். சனி பகவானின் தோஷம் நீக்கும் தலங்கள் வரிசையில் இது தலையாயது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர், தேவியார் - பஞ்சினுமெல்லடியம்மை.
இத்திருக்கோயிலை வலம் வந்து சனி பகவானை வழிபட்டுத் திருக்கொள்ளி அக்னீஸ்வரர் திருமுன்பு வீழ்ந்து வணங்குபவர்களின் சனி தோஷத்தைத் தன் ஜோதியால் எரித்துச் சாம்பலாக மாற்றுபவன் அவ்விறைவன் என்பதைத் தொன்மை நூல்கள் கூறுகின்றன.
1,500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இத்திருக்கோயிலை மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் கற்கோயிலாகப் புதுப்பித்தான். இக்கோயிலில் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள், முதலாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டு, அவனது மகன் முதல் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள், பிற சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன.
மேலும் அறிய
http://www.livingextra.com/2011/07/blog-post_28.html
தல வரலாறு
செய்த தவறுக்காக முற்றிலும் பலம் இழந்த சனி பகவான் , பின்பு மனம் வருந்தி, வசிட்ட முனிவரின் யோசனைப்படி அக்கின்வனம் எனும் இத்தலத்தில் கடுமையான தவமியற்ற ஈசன் மனமிரங்கி அக்னி உருவில் தரிசனம் தந்து சனி பகவானை பொங்கு சனியாக மறு அவதாரம் எடுக்கச் செய்ததுடன் இத்தலத்திற்கு வந்து தம்மையும் சனீஸ்வரரையும் வழிபடுவோர்க்கு சனிக்கிரகம் தொடர்பான எல்லா துர்பலன்களும் விலகும் என அருளினார். பொங்கு சனியாக அவதாரம் எடுத்து குபேர மூலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நன்றி லிவிங் எக்ஸ்ட்ரா தளம்
திருக்கொள்ளிக்காடு அக்கினீஸ்வரரையும், சனீஸ்வரரையும் வழிபட்டால் துர்பலன்கள் விலகும் என்ற செய்தியை தந்தமைக்கு மிக்க நன்றி சகோ!
ReplyDelete