கலிகாலத்தில் காலனை வென்ற சிவபக்தர்.
ஜீவ சமாதி அடைவது என்பது எளிதான விசயம் அல்ல.. அப்படி இருக்கும் போது அதையும் ஒருவர் இந்த கலிகாலத்தில் சாதித்து காட்டிஉள்ளார் என்றால் அவரின் தூய பக்தியும் அவரின் ஆத்மார்த்த பிரார்த்தனையும் எந்த அளவுக்கு உயர்ந்தது என்று எண்ணும்போதே மனம் நெகிழ்ச்சி கொள்கிறது அல்லவா?
இதோ அவரைப் பற்றிய தகவல் தினமலரில்.
இது மட்டுமில்லாமல் விஜய் டிவி நடந்தது என்ன குற்றமும் பின்னனியும் என்ற நிகழ்ச்சியில் அவரையும் அவர் ஜீவ சமாதி அடைந்ததையும் ஒளிப்பரப்பினர்.. முடிந்தால் அந்த விடியோ காட்சி இணைய தளத்தில் காணுங்கள்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=VWGGvR8ymSQ#!
Dinamalar News
திருத்தணி: கோவை மாவட்டம் தாராபுரம் அடுத்த உத்தமபாளையம் பகுதியில் பிறந்தவர் பழனிச்சாமி, 96. இவர், 56 ஆண்டுகளுக்கு முன், அரக்கோணம் அடுத்த போடிநாயுடுகண்டிகை கிராமத்திற்கு குடிவந்தார். சிவபக்தரான இவர், இக்கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் அருகே தங்கி, தினசரி ஒரு வீடு வீதம் இங்குள்ள, 30 வீடுகளில் சாப்பிட்டு வந்தார். இவர் தங்குவதற்கென இக்கிராம மக்கள், பெருமாள் கோவில் அருகே, அறை கட்டிக் கொடுத்துள்ளனர். இவர் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு மந்திரித்தல், ஜோசியம் பார்த்தல் ஆகியவற்றையும் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி அன்று கிராம மக்களை அழைத்து, "நான் வரும், 20ம் தேதி மாலை, 3 மணிக்கு இறந்து விடுவேன். எனவே எனக்கு, 6 அடி ஆழம், 3 அடி அகலத்தில் பள்ளம் தோண்டி புதையுங்கள்' என்றார். இதையடுத்து, பெருமாள் கோவில் அருகே ஜீவசமாதி கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. உயிருடன் இருக்கும்போதே புதைத்தால் கொலை வழக்கில் போலீசார் பிடித்து விடுவார்கள் என, கிராம மக்கள் பயந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அவர் கூறியதுபோல், அவரது உயிர் இன்று மதியம், 3.05 மணிக்கு பிரிந்தது. இதையடுத்து, கிராம மக்கள் முறைப்படி அவரது உடலை புதைத்து ஜீவசமாதி அமைத்தனர்.
எல்லாம் சிவமயம்
No comments:
Post a Comment