Monday 31 January 2011

உண்மைகள் பலபல அவற்றுள் சில ஆன்மிக துகள்கள்

1.மனிதர்களுக்கு முற்பிறவிகள், மறுபிறவிகள் உண்டு.

2.பிறவாமை, இறவாமை, காயகல்ப சித்திகள் பெற முடியும்

3.ஆவி, ஆன்மா, உயிர் என்ற மூன்று உண்டு.

4.(பசு) உயிர், (பதி) இறை, (பாசம்) தளை என்ற மூன்றே இந்து மதத்தின் அடிப்படை.

5.இம்மண்ணுலகின் இயக்கமும், இம்மண்ணுலகப் பயிரின உயிரின வாழ்வியல்களும் விண்ணிலுள்ள நாள்கள், கோள்கள், இராசிகள், மீன்கள் ... முதலியவற்றின் இயக்கப்படிதான் நிகழுகின்றன.

6.சூரியனிலிருந்து உடைந்து பிரிந்து வந்த நெருப்புக் கோளம்தான் படிப்படியாகப் பனிக்கோளமாக, நீர்க்கோளமாக இருந்து... கல்லும் மண்ணும் தோன்றிப் பின்னர் பயிரினங்களும் உயிரினங்களும் தோன்றி இன்றைய உலகாயிற்று.

7.உடல் தோன்றுவதற்கு முன்னரே உயிர்கள் தோன்றி உலவி வாழுகின்றன (அருவங்கள்). இவையே கருவறை புகுந்து உருவங்களாகின்றன. இதுவே அருவ நிலைகள், உருவ நிலைகள், அருவுருவ நிலைகள் எனப்படுகின்றன.

8.ஆணும், பெண்ணும் சமமே. ஆணை விடப் பெண் அருட்சத்தி பெறும் ஆற்றலையும், தரத்தையும், தீரத்தையும் மிகுதியாகவே பெற்றிருக்கிறாள். பெண்ணையே சத்தியாக வழிபடுவது தான் தந்தர, தாந்தர, தாந்தரீக, தந்திற, தாந்திறப் பூசை முறைகள். சத்தியே அனைத்துக்கும் மூலமானவள், மேலானவள், தலைமையானவள்.

9.பெண் திங்கள் தோறும் மலரும் மலர். அவளைத் தீட்டு என்றோ! விதவை என்றோ! விலக்கி வைப்பது விவேகமற்ற செயல்; தெய்வ விரோதச் செயல்.

10.இம்மண்ணுலகும், பயிரினங்களும், உயிரினங்களும் இயற்கையே. இவற்றின் வடிவிலும், வாழ்விலும் இறைமை அணுக்கள் ஊற்றெடுக்கின்றன. அவற்றைக் குருவழி அறிந்து செயல்படுபவர் திருநிலைகளைப் பெறலாம்.

11.வாழ்ந்த மனிதர்களே இறை, கடவுள், தெய்வம், ஆண்டவர், பட்டவர், தேவர், தேவியர், அமரர், வானவர், ... இருடி, முனிவர், கணபாடி என்று நாற்பத்தெட்டுத் திருநிலைகளைப் பெறுகின்றனர்.

12.ஒரே கடவுள் என்ற கருத்துத் தவறானது. உலகில் தோன்றும் அருளாளர் எல்லோருமே அவரவர் அநுபவத்துக்கேற்ப ஒரு கடவுளைப் பற்றிய உண்மையைக் கூறிச் சென்றுள்ளனர் என்பதால் கடவுள்கள் பலர் உண்டு என்ற பேருண்மை விளங்குகிறது.

13.எல்லா வழிபாட்டு நிலையங்களும், வழிபாட்டு முறைகளும், மறைகளும், நெறிகளும், வேதங்களும், நாதங்களும், போதங்களும், ஓதங்களும், சித்தங்களும், தவங்களும் ... மனிதரைத் தூய்மைப் படுத்தி உய்வு பெறச் செய்வனவே. அதனால் உலக ஆன்ம நேய ஒருமைப் பாட்டுக்கு உலகை அழைத்துச் செல்லுவது அனைத்துக்கும் மூலமான, முதலான, தாயான சித்தர் நெறியெனும் இந்து மதமே.

14.அனைவரும் எல்லா உரிமைகளையும் பெற்றுப் பெருமையோடு பண்பாடும், நாகரீகமும் பேணி வாழும் வாழ்வைப் பதினெண்சித்தர்கள் படைத்த இந்து மதமே செயலாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றது.

15.மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதோ, சுரண்டுவதோ, ஏமாற்றுவதோ தவறு! தவறு!! தவறு!!!

16.மொழி, இனம், நாடு, மதம், சாதி ... என்பவை மானுட அமைதியையோ! நிறைவையோ! நிம்மதியையோ! ஒற்றுமையையோ! மகிழ்ச்சியையோ! பாதுகாப்பையோ! நலிவடையச் செய்துவிடக் கூடாது! கூடாது! கூடாது! கூடவே கூடாது!

17.சமத்துவச் சகோதரத்தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் அமைக்கப் பாடுபடுவதே பதினெண் சித்தர்களின் தத்துவ நோக்கமாகும்.

18.மனித வாழ்வுக்குரிய அன்பு, பாசம், பற்று, கனிவு, காதல், இனிமை, உறவு, (குடும்ப வாழ்வு) இல்லறம், கடமை, வீரம், நன்றி, கட்டுப்பாடு, ஒற்றுமை, நட்பு, சமாதானம் ... முதலிய மென்மைப் பண்புகளின் விதைப்பண்ணையே பதினெண் சித்தர்கள் படைத்த இந்து மதம். அதனால் தான் ‘இந்து மறுமலர்ச்சி பெற்ற போதுதான் பிற்காலச் சோழப் பேரரசு (785-1279) அருளாட்சி நிகழ்த்தப் பிறந்தது’ என்ற இப்பேருண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.


நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றி!!!! நன்றி!!!!!

குருமகா சன்னிதானம்

1 comment:

  1. தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சித்தர்
    கருவூறார் அருளிய சத்தி காயந்திரி மந்தரத்திற்கு
    முதன்முறையாக இசை அமைக்கப்பட்டுள்ளது
    சித்தரடியர்கள் வாங்கி பயன்பெறவும். தொடர்புக்கு
    M G பாலா 9345342424

    ReplyDelete