Friday 28 January 2011

நீங்கள் இப்படி நினைத்ததுண்டா?

உண்மையான ஒருவனுக்கு, கடவுள் தேடலும் குடும்ப பாரமும் இடையறாது தொந்தரவு கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.

கடவுளை நோக்கி நகரும் போது குடும்பம் இழுக்கும்.

குடும்பத்தையே சுற்றி வரும்போது கடவுள் நினைப்பு இழுக்கும்.

நல்ல மனிதனின் இடையறாத போராட்டம் இது.

சரியான உறக்கத்தை கொடுக்காது, திடுக்கிட்டு எழ வைக்கும். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது இது தான்!

இந்த இரண்டுக்குமான வேதனையில் நீங்கள் தவித்திருகிறிர்களா?

பிரியமான மனைவி, பிரியமான குழந்தைகள், நல்ல மாமனார் வீடு, சுகமான தாய்-தந்தை, ஆயினும் கடவுள் என்பது வேறு இடத்தில், வேறு எங்கோ இருப்பதாக நீங்கள் நினைத்திருகிறிர்களா?






கடவுளைத் தேடுபவர் வெளியே அலைய அலையத்தான் உள்ளுக்குள் போகமுடியும். வெளியே கடவுள் இல்லை, உள்ளே தன் உள்ளத்தில் இருக்கிறார் என்பதை, அலைந்துதான் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த கருத்தை நீங்கள் ஏற்றுகொல்கிறிர்களா?

1 comment:

  1. பதிணென்சித்தர்கள் அருளிய தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சித்தர் கருவூறாரின் சத்தி காயந்திரி மந்தரத்திற்கு
    முதன்முறையாக இசை அமைத்துள்ளேன். சித்தர் அடியார்கள்
    வாங்கி பயனடையவும். MG பாலா 8124261565

    ReplyDelete