இங்கு நான் பகிர்ந்து கொள்ள விரும்புவது சில ஜோதிர்லிங்க தலங்களின் புகைப்படங்களை உங்கள் தரிசனத்திற்காக பகிர்ந்துகொள்ள விரும்பி பதிக்கீறேன். ஏற்கனவே என்னுடைய மகா காளேஸ்வரரின் தரிசனத்தை முந்தைய பதிவில் பகிர்ந்துகொன்டுள்ளேன். இந்த முறை அவரின் பஸ்மார்த்தியை கண்டு அக மகிழ்தேன். ஆனால் புகைப்படம் எடுக்கவில்லை. அவர் ஏனோ அனுமதிக்கை வில்லை. மற்றபடி ஓம் கரேஸ்வரைன் கோபுரம் மற்றூம் அவரின் தரிசன்ம் உங்கலுக்காக. அமலேஸ்வரரின் புகைப்படத்தை அரிதாக எடுத்து விட்டேன். அதுவும் உங்களுக்காக பதிக்கிறேன்.
ஐயா இதை எல்லாம் அவ்வளவு சுலபமாக எடுக்க முடியாது. ஏதோ உங்கலுக்கும் இந்த தலத்தை பார்வை இடுபவர்களுக்காக சிவனின் அருள் உன்டு என்பதற்கிணங்க இங்கே பதிக்கிறேன்.
பக்தியோடு கண்டால் எல்லாம் சிவ மயமே.
சிவம் சிவமய்ம் எங்கும் அவன் மயம்.
சோம் நாத் ஆலயத்தின் எழில்மிகு தோற்றம்
ஓம் காரேஸ்வரரின் ஆலய தரிசனம். ஏனோ தெரிய வில்லை மூலவரை புகைப்படம் எடுக்கத்தோன்றவில்லை.
ஓம் காரேஸ்வரரின் ஆலய கோபுரத்தின் மேல் உள்ள சிவலிங்கம் உங்களின் தரிசனத்திற்காக
ஓம் காரேஸ்வரரின் ஆலய கோபுரத்தின் எழில்மிகு தோற்றம், நர்மதா நதிக்கரையில் வீற்றிருக்கும் ஸ்ரீஓம்காரஸேவரைன் அலய கோபுர தரிசனம்
ஓம் காரேஸ்வரரின் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள் மிகு ஸ்ரீசனிஸ்வர பகவானின் தரிசனம் உங்களுக்காக... இவரை இதுபோல யாரவது இப்படி தரிசித்து இருப்பீர்களா?? இவர் ஓம் காரேஸ்வரர் ஆலயத்தை சுற்றி வரும் போது நமக்காக தரிசனம் தருகிறார், ஏற்கனவே நான் பதித்த ஸ்ரீசனிஸ்வர காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பு.
மற்ற படங்கள் நாளைய பதிவில்
om namasivaya
ReplyDeletesubbu rathinam