
"சிவ' என்ற வார்த்தை எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ந்தால்,
ஆரம்ப எழுத்தான "சி' என்ற எழுத்தைப் பார்த்தால் ச்+இ+அ என்று ஆகிறது.
இதில் இயங்கும் எழுத்து "ச'கரமும் "இ'கரமும் ஆகும். "ச'கரம் "சரண்' என்னும் புகலிடத்தைக் குறிக்கும் சொல்.
"இ'கரம் "இவன்' என்பதைக் குறிக்கும் சொல்.
'சிவனிடம்தான் நீ சரணடைய வேண்டும்' என்பதை "சி' என்ற எழுத்து உணர்த்துகிறது.
அதே போன்று "வ' என்ற எழுத்து உயிரைக் குறிப்பது.
எனவே உயிர்கள் சிவபெருமானை சரண் அடைந்தால், எல்லா துன்பங்களும் நீங்கி அவன் அருள் பெறலாம் என்பதே "சிவ' என்பதின் அர்த்தம்
No comments:
Post a Comment