Monday, 27 September 2010

பதஞ்சலி முனிவரின் பூசை துதி

பதஞ்சலி முனிவரை தியானிக்க பின்வரும் 16 போற்றிகளை தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.




பதினாறு போற்றிகள்

1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!

2. ஆதிசேஷனின் அவதாரமே போற்றி!

3. ஒளிமயமானவரே போற்றி!

4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!

5. கருணாமூர்த்தியே போற்றி!

6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!

7. பூலோகச் சூரியனே போற்றி!

8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!

9. பேரும் புகழும் உடையவரே போற்றி!

10. இன்மொழி பேசுபவரே போற்றி!

11. இகபர சுகம் தருபவரே போற்றி!

12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!

13. அஷ்டமா சித்திகளையுடையவரே போற்றி!

14. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி!

15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!

16. யோகங்கள் அனைத்தையும் அளிக்கும் பதஞ்சலி சித்த சுவாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான

“ஓம் க்லம் பதஞ்சலி சித்தரே போற்றி!”

என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.

நிவேதனமாக இளநீர், கடுக்காய், தண்ணீருடன், தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், பழம் போன்றவற்றை வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனனயை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும்

Friday, 24 September 2010

ஸ்ரீ வெங்கடேஷ்வராய காயத்ரி மந்திரம்

ஓம் வெங்கடேஷ்சாய வித்மஹே நிரஞ்ஜனாய தீமஹீ
தந்நோ ஸ்ரீநிவாச ப்ரஜோதயாத்









ஓம் வெங்கடேஷ்சாய வித்மஹே நிரஞ்ஜனாய தீமஹீ
தந்நோ ஸ்ரீநிவாச ப்ரஜோதயாத்

Tuesday, 21 September 2010

புரட்டாசி மாத பொக்கிசம் உங்களுக்காக-ஒரு மணி நேர படம்

நண்பர்களே அந்த ஏழுமலையானின் அருளால் கிடைக்கப்பெற்ற இந்த பொக்கிசத்தை உங்களுடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைக்கிறேன்.




இந்த மாதம் மட்டும் இந்த பதிவு இருக்கும். அதாவது ஒளி ஒலி நாடா இருக்கும். இதனுடைய படத்தைதான் முன்னர் பதித்திருந்தேன், இப்போது அதனுடைய படம் .

அனைவரும் பதிவிறக்கி பார்த்து அந்த திருப்பதி ஏழுமலையானை வணங்குங்கள்.

இந்த லிங்குகளை காப்பி செய்து உங்களின் அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து என்டர் பட்டனை அழுத்தவும். டவுன் லோட் லிங்க் வரும்.


http://hotfile.com/dl/16409088/5e4857d/Lord_Venkateswara_Original.part1.rar.html

http://hotfile.com/dl/16409231/996ac21/Lord_Venkateswara_Original.part2.rar.html

http://hotfile.com/dl/16409368/2238037/Lord_Venkateswara_Original.part3.rar.html

http://hotfile.com/dl/16409472/2913885/Lord_Venkateswara_Original.part4.rar.html

http://hotfile.com/dl/16409623/7c9b5f1/Lord_Venkateswara_Original.part5.rar.html

http://hotfile.com/dl/16409668/b794305/Lord_Venkateswara_Original.part6.rar.html

ஒரு மணி நேர படம் திருப்பதி மலை முதல் திருப்பதி ஏழுமலையான் மூலஸ்தானம் வரை படமாக்கப்பட்டுள்ளது. மிகவும் அரிதான படம்.

ஓம் நமோ வெங்கடேஸ்வராய நம.

புரட்டாசி மாதம் முடிந்தவுடன் இந்த பதிவு நீக்கப்படும்.

அனைவரும் பார்த்து மகிழுங்கள்
.

Sunday, 19 September 2010

"சிவ" என்னும் மகா மந்திரமானதின் பொருள்




"சிவ' என்ற வார்த்தை எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ந்தால்,

ஆரம்ப எழுத்தான "சி' என்ற எழுத்தைப் பார்த்தால் ச்+இ+அ என்று ஆகிறது.

இதில் இயங்கும் எழுத்து "ச'கரமும் "இ'கரமும் ஆகும். "ச'கரம் "சரண்' என்னும் புகலிடத்தைக் குறிக்கும் சொல்.

"இ'கரம் "இவன்' என்பதைக் குறிக்கும் சொல்.

'சிவனிடம்தான் நீ சரணடைய வேண்டும்' என்பதை "சி' என்ற எழுத்து உணர்த்துகிறது.

அதே போன்று "வ' என்ற எழுத்து உயிரைக் குறிப்பது.

எனவே உயிர்கள் சிவபெருமானை சரண் அடைந்தால், எல்லா துன்பங்களும் நீங்கி அவன் அருள் பெறலாம் என்பதே "சிவ' என்பதின் அர்த்தம்

Sunday, 12 September 2010

என்னை யோசிக்க வைத்த மாணிக்கவாசகரின் பாடல்!!!!





புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்…..

- மாணிக்கவாசகர்

நான் எங்கே எதில் இருக்கிறேன்..தெரியவில்லையே???!!!




Sunday, 5 September 2010

அதிசக்தி மந்திரங்கள்

சிவதுதி

ஓம் சிவதூத்யை ச வித்மஹே
சிவங்கர்யைச தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

பாலா

ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தன்னோ பாலா ப்ரசோதயாத்

காளிகா தேவி

ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்

வாராஹி

ஓம் வராஹமுகி வித்மஹே
ஆந்த்ராஸனீ தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்


திரிபுரசுந்தரி

ஓம் ஐம் திரிருபுரதேவ்யை வித்மஹே
க்ளீம் காமேஸ்வர்யை தீமஹி
சௌஹ் தன்னோ க்ளின்னே ப்ரசோதயாத்

ஓம் ஹைம் திரிபுரதேவி வித்மஹே
க்ளீம் காமேஸ்வரீ தீமஹி
சௌஹ் தன்னோ க்ளின்வியை ப்ரசோதயாத்

Friday, 3 September 2010

அதி அற்புதமான படம்

அதி அற்புதமான ஒரு காவியம். காண கிடைத்தற்கரிய ஒரு பொக்கிஷம். எதையோ தேடினேன் இந்த படம் கிடைத்தது.



திருப்பதி கொங்கணவரை பட்டென என் மனதில் ஓட செய்த படம் இது.